92 வயதில் 5-வது திருமணத்திற்கு தயாராகும் தொழிலதிபர்!

பிரபல தொழிலதிபர் ரூபர்ட் முர்டோக். பல்வேறு நிறுவனங்களை நடத்திவந்தாலும், ஆஸ்திரேலியாவில் உள்ள ஊடக நிறுவனத்தால் பிரபலமடைந்தவர் ரூபர்ட் முர்டோக்.

இவர் தனது 92 வயதில் 66 வயது பெண்ணுடன் ஐந்தாவது திருமணம் செய்துகொள்வதுதான் தற்போது சர்வதேச அளவில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.

இதுகுறித்து அவர் தனது சொந்த செய்தித்தாளான நியூயார்க் போஸ்டில் பேட்டி அளித்துள்ளார். அதில், நான் மிகவும் பதட்டமாக இருந்தேன். நான் காதலிக்க பயந்தேன்.

இது எனது கடைசி காதலாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். அப்படியே இருப்பது நல்லதுதான். நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன், என்று மர்டாக் கூறியுள்ளார்.

66 வயதான ஆன லெஸ்லி ஸ்மித் – ரூபர்ட் முர்டோக் அண்மையில் சந்தித்தனர். அப்போது முதல் சந்திப்பிலேயே காதலை வெளிப்படுத்தினர். லெஸ்லி ஸ்மித் ஏற்கெனவே திருமணமாகி கணவரை இழந்தவர்.

மறைந்த இவரது கணவர் செஸ்டர் ஸ்மித், நாட்டுப்புற பாடகராகவும் மற்றும் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகியாகவும் இருந்தவர்.

மர்டாக், லெஸ்ஸி இருவரும் வரும் மே மாதத்தில் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்துள்ளனர். மெல்போர்னில் பிறந்த மர்டாக், சுமார் 17 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்குச் சொந்தக்காரர்.

ரூபர்ட் முர்டோக்கின் முதல் மூன்று மனைவிகளுக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர். ப்ருடென்ஸ் மேக்லியோட், அவரது முதல் மனைவி. அன்னா மான் இரண்டாவது மனைவி, மூன்றாவது மனைவி வெண்டி டெங்கு.

மர்டோக்கின் நான்காவது மனைவி முன்னாள் மாடல் அழகி ஜெர்ரி ஹால். கடந்த ஆண்டுதான் மர்டாக் இவரிடமிருந்து பிரிந்தார். இந்த நிலையில் 5ஆவது திருமணம் செய்துக்கொள்ள தயாராகி உள்ளார்.-News & image Credit: dinamaalai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!