தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது!

குமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ (வயது 29). இவர் குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான தேவாலயத்தில் மதபோதகராக (பாதிரியார்) பணியாற்றினார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தின.

அதாவது பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் அவரது ஆபாச வீடியோ, புகைப்படம், வாட்ஸ்-அப் சாட்டிங் பதிவுகள் பரவின. தேவாலயத்திற்கு வரும் பெண்களுடன் பாதிரியார் ஆன்டோ ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலானது.

இதனிடையே, கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்திற்கு வரும் பெண்களுடன் வீடியோவில் ஆபாச செயலில் ஈடுபட்டு, பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகர் ஆன்டோ மீது இளம்பெண் புகார் அளித்தார். புகாரையடுத்து பாதிரியார் ஆன்டோ தலைமறைவானார்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த பாதிரியார் பெனடிக் ஆன்டோவை போலீசார் இன்று கைது செய்தனர்.

நாகர்கோவிலில் பண்ணைவீட்டில் தலைமறைவாக இருந்த பெனடிக் ஆன்டோவை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!