லாட்டரியில் ரூ. 75 லட்சம் வென்ற மே.வங்காள தொழிலாளி… போலீஸ் நிலையத்தில் தஞ்சம்!

கேரள மாநிலம் எர்ணாகுளம் சோட்டானிகாரையில் சாலை அமைக்கும் பணியில் கூலி தொழிலாளியாக மேற்குவங்காளத்தை சேர்ந்த படீஷ் வேலை செய்து வருகிறார்.

கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் படீஷ் அவ்வப்போது லாட்டரி சீட்டு வாங்கும் வழக்கம் கொண்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு தான் வாங்கிய லாட்டரி சீட்டு வெற்றிபெற்றுள்ளதா? என படீஷ் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, தான் வாங்கிய லாட்டரி சீட்டு எண்ணிற்கு 75 லட்ச ரூபாய் பரிசு விழுந்திருப்பதை கண்டு படீஷ் அதிர்ச்சியடைந்தார்.

இவ்வளவு பணம் லாட்டரியில் விழுந்ததையடுத்து திகைத்துப்போன படீஷ் உடனடியாக முவதுபுலா போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார். லாட்டரியில் ரூ. 75 லட்சம் விழுந்தத நிலையில் அதை எப்படி பெறுவது? யாரிடம் சென்று கேட்பது என்று அறியாத படீஷ் தன் லாட்டரி சீட்டை வேறு யாராவது பறித்துக்கொள்வார்கள் என்ற பயத்தில் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

அவருக்கு லாட்டரி சீட்டில் விழுந்த பணத்தை எடுப்பதற்கான நடவடிக்கைகளை கூறி, உரிய பாதுகாப்பு அளிப்பதாகவும் உறுதியளித்தனர். போலீசாரின் உறுதியையடுத்து படீஷ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

மேலும், தான் மேற்குவங்காளத்திற்கு செல்ல உள்ளதாகவும், லாட்டரியில் விழுந்த 75 லட்ச ரூபாய் பணத்தில் மேற்குவங்காளத்தில் புதிய வீடு கட்ட உள்ளதாக படீஷ் கூறினார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!