உலகம் முழுவதும் வெப்பம் அதிகரிப்பு- சென்னை உள்பட முக்கிய நகரங்களுக்கு ஆபத்து!

கடல் வெப்பநிலையை கணக்கிடுவது 1900-ம் ஆண்டிலிருந்து தொடங்கியது. பல தசாப்தங்களாக இந்த வெப்பம் அதிகரித்து வருகிறது. 1901-ம் ஆண்டுக்கு பிறகு அது மேலும் மேலும் அதிகரித்தது.

கடந்த 1000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2012-ல் கடல்நீர் வெப்பமடைந்தது. சீன அறிவியல் அமைப்பு அமெரிக்காவில் உள்ள தேசிய வளிமண்டல ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல கண்காணிப்பு மையம் போன்ற நிறுவனங்களின் பிரபல விஞ்ஞானிகள் இதுகுறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

கலிபோர்னியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகள், மேலும் பேரழிவுகள் விரைவில் வரும் என்பதற்கான ஆரம்ப அறிகுறிகள் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.

புதைபடிவ எரிபொருட்களை பிரித்தெடுக்கும் போது பசுமை இல்ல வாயு (கிரீன்ஹவுஸ்) வெளியேற்றபடுகிறது. இருப்பினும், இந்த உமிழ்வுகளில் 90 சதவீதம் கடல்களால் உறிஞ்சப்படுகிறது.

எனவே, புதைபடிவ எரிபொருள்கள் பிரித்தெடுக்கப்படுவதால், பெருங்கடல்கள் தொடர்ந்து வெப்பமடைகின்றன. தொழிற்சாலைகள், வாகனங்கள் மற்றும் பிற மனித நடவடிக்கைகளில் இருந்து வெளியேறும் பெரும்பாலான கார்பன் உமிழ்வுகள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன.

சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்கள் கடல்கள் வெப்பமடைவதால், தீவிர பேரழிவுகள் ஏற்படுகின்றன. விஞ்ஞானிகள் கடலின் மேற்பரப்பில் இருந்து கடல் வெப்பநிலையை 6501 அடி ஆழத்திற்கு ஒப்பிட்டுள்ளனர்.

2021-ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2022-ம் ஆண்டில் கடல்கள் 10 மடங்கு அதிக வெப்பத்தை உறிஞ்சியுள்ளன. இது ஆண்டு முழுவதும் 40 ஹேர் ட்ரையர்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் வெப்பத்திற்கு சமம் ஆகும்.

அதாவது 1.25 லட்சம் ஆண்டுகளில் இல்லாதபடி உலகம் முழுவதும் வெப்பம் அதிகரித்துள்ளது. இதனால் கடல்களில் அமிலங்களின் அளவு அதிகரித்து நீர் வாழ் உயிரினங்களுக்கும், கடலோர மக்களுக்கும் ஆபத்து உருவாகி வருகிறது.

குறிப்பாக கடல்களில் பல்லுயிர் பெருக்கமும், சில உயிரினங்களும் அழிந்து வருகின்றன. வெப்ப அலைகள், புயல்கள், வெள்ளம் ஆகியவை பூமி வெப்பமடைவதற்கான முன்னறிவிப்பாக இருக்கலாம்.

இது தொடர்பாக கடந்த 6 ஆண்டுகளில் 1000 விஞ்ஞானிகள், 10 ஆயிரம் பக்கங்களை கொண்ட 6 அறிக்கைகளை தயாரித்து அளித்துள்ளனர்.

அதில் 6 அறிக்கைகளை வெளியிட ஐ.நா. காலநிலை மாற்றம் தொடர்பான ஒருவார கால கூட்டத்தை ஏற்பாடு செய்தது. வெப்பம் அதிகரித்து வருவதால் சென்னை உள்பட முக்கிய நகரங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கொல்கத்தா, மியான்மரின் யாங்கோன், தாய்லாந்தின் பாங்காக், வியட்நாமின் ஹோசிமின், பிலிப்பைன்சின் மணிலா ஆகிய நகரங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளன. சில இடங்களில் கடல் மட்டம் 20 முதல் 30 சதவீதம் உயரும் என்றும், இதனால் வெள்ள அபாயம் அதிகரிக்கும் என்றும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புதைவடிவ எரிபொருள் பயன்படுத்துவதை கைவிட வேண்டும், சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். படிம எரிபொருட்களின் பயன்பாட்டை குறைத்தால் உலகம் முழுவதும் வெப்பம் அதிகரிப்பதை தடுக்க முடியும் என்று ஆய்வார்கள் தெரிவித்துள்ளனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!