சாலையைக் கடக்கும் உலகின் மிகப்பெரிய அனகோண்டா.. திகைத்து நின்ற மக்கள்

உலகின் மிகப்பெரிய பாம்பு அனகோண்டா சாலையில் செல்வதைப் பார்த்து திகைத்த மக்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.

பாம்பைப் பார்த்தால் பதறிப் போகும் மனிதர்கள், அது சாலையை கடப்பதைப் பார்த்தால் திகைத்துப் போகாமல் என்ன செய்வார்கள்? மனிதர்களிடையே பாம்பு இருப்பதைக் கண்டு பயப்படும் பல வீடியோக்களை நீங்கள் பார்த்திருக்கலாம்.

நாட்டிற்குள் வீட்டிற்குள் பாம்பு வந்தால், அதைப் பிடித்து மீண்டும் காட்டுக்குள் விடும் வீடியோவை நாம் பார்த்திருக்கலாம். ஆனால் இன்று பார்க்கப் போகும் வீடியோவில் உலகின் மிகப்பெரிய பாம்பாகக் கருதப்படும் அனகோண்டா பாம்பு சாலையில் செல்வதைப் பார்க்கலாம்.

பரபரப்பான சாலையில், மிகப் பெரிய அளவிலான அனகோண்டா பாம்பு திடீரென சாலையில் சென்று ரோட் கிராசிங் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலாகி வருகிறது, அதில் ஒரு பெரிய அனகோண்டா பாம்பு அகலமான நெடுஞ்சாலையை கடக்கிறது. இந்த பாம்பு கிராசிங் மோமெண்ட், ஒட்டுமொத்த போக்குவரத்தும் ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது.

அதிர்ச்சியூட்டும் வீடியோ

இந்த வீடியோ, Snake.wild என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ பிரேசிலில் இருந்து வந்ததாகத் தெரிகிரது. இந்த வீடியோவை மக்கள் மிகவும் விரும்புகின்றனர்.-News & image Credit: zeenews * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!