என்னை கொன்னுடுங்க… கதறும் அங்காடித் தெரு நடிகை!

தன்னுடைய மார்புக்கும் புற்றுநோய் பரவி விட்டது என்றும் தன்னை விஷ ஊசி போட்டு கொன்று விடுங்கள் என்றும் அங்காடித் தெரு நடிகை சிந்து கதறியுள்ள வீடியோ இணையத்தை கலங்க வைத்துள்ளது.


வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அங்காடித் தெரு. இந்தப் படத்தில் அஞ்சலி, மகேஷ், பாண்டி என பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகைசிந்து. அங்காடித் தெரு படத்திற்கு பிறகு சில படங்களில் நடித்தார் சிந்து. இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் நடிகை சிந்து.

மார்பகம் அகற்றம்
அவருக்கு நடிகை சனம் ஷெட்டி உட்பட பலர் சிகிச்சை உதவி செய்தனர். இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள நடிகை சிந்து புற்றுநோயால் தனது வாழ்க்கையை போராட்டமாக உள்ளது என கலங்கியுள்ளார். புற்று நோய்க்காக கீமோதெரபி சிகிச்சை பெற்றதால் தனது கை நரம்புகள் செயலிழக்க துவங்கியது என்றும் தனது வலதுபுற மார்பகம் புற்றுநோய் காரணமாக அகற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

காயம் ஆறவில்லை

மேலும் அந்த அறுவை சிகிச்சை செய்த காயம் கூட இன்னும் ஆறவில்லை என்றும் வலது கை வீக்கமாகவே உள்ளது என்றும் தெரிவித்துள்ள சிந்து, கடந்த 3 வருடங்களாக தனது நண்பர்கள் மற்றும் மக்களின் உதவியோடு சமாளித்து வருவதாக கதறியுள்ளார். சமீபத்தில் கூட ஒரு சீரியலில் கமிட்டானதாகவும் ஆனால் இறுக்கமாக உடைகளை அணி முடியவில்லை, வளையல் அணிந்தால் அலர்ஜி ஏற்படுவதாலும் சீரியலில் கூட தன்னால் நடிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

மற்றொரு மார்புக்கும்

தற்போது மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தனது மற்றொரு மார்பகத்திலும் புற்றுநோய் பரவிவிட்டதாகவும் கதறியுள்ளார் நடிகை சிந்து. தனது வாழ்க்கையே போராட்டமாக இருப்பதாக கூறியுள்ள சிந்து, தான் தூங்கும் தன்னை கொன்று விடும்படி தனது தம்பியிடம் கூறியதாகவும் தனக்கு முதலில் சிகிச்சை அளித்த டாக்டரிடம் தன்னை கொன்று விடும்படி அழுது கெஞ்சியதாகவும் கலங்க வைத்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்

தனது மகள் மற்றும் அவருடைய குழந்தையை தான்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தன்னுடைய நிலைமையே இப்படி இருப்பதால் என்ன செய்வது என்று தெரியவில்லை என்றும் வேதனைப்பட்டுள்ள நடிகை சிந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து உதவி கேட்கலாம் என்று முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகை சிந்துவின் இந்த தனது நிலை குறித்து உருக்கமாக பேசியிருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஒரு நடிகைக்கே இவ்வளவு கஷ்டமா என கலங்கி வருகின்றனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!