செய்தி ஒத்திகை பார்த்த நிருபர்… திடீரென புகுந்த இளம்பெண் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

ஜான்பால் கோன்சோ என்ற ஆஸ்திரேலிய நிருபர் மால்டோவா தலைநகர் சிசினாவில் உள்ள தேவாலயத்தின் முன் நின்று, உக்ரைனுக்கு ராணுவ உதவியாக 500 மில்லியன் டாலர் வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்ததைப் பற்றிய செய்தி அறிக்கை குறித்து தகவலளிக்க ஒத்திகை பார்த்தார்.

அந்த சமயத்தில் திடீரென அங்கு வந்த இளம்பெண் ஒருவர், யாரும் எதிர்பாரா வண்ணம் நிருபருக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்து விட்டார்.

நிருபர் கோன்சோவோ வெக்கத்தில் நெளிந்து கொண்டே புன்னகைத்தார்… அதிலும், அப்பெண் போகும்போது, “நீங்க ரொம்ப க்யூட்” என்று சொல்லிவிட கோன்சோ கூடுதல் குஷியாகிவிட்டார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!