பெண்களை அதிகம் தாக்கும் சைலன்ட் கில்லர் கணைய புற்றுநோய்!

இன்றைய தலைமுறையை சேர்ந்த ஆண்கள், பெண்கள் பலருக்கும் புற்றுநோய் பாதிப்பு உள்ளது. அதிலும் குறிப்பாக இளம் பெண்களுக்கு கணைய புற்றுநோய் பாதிப்பு அதிகளவில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தான் கணைய புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக அமைகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பொதுவாக கணைய புற்றுநோய் சைலன்ட் கில்லர் என்று அழைக்கப்படுகிறது.

ஏனெனில் இது நோயாளிகளுக்கு எந்தவித அறிகுறிகளையும் வெளிக்காட்டுவதில்லை மற்றும் அறிகுறிகள் வெளிப்பட்டாலும் அது கணைய புற்றுநோய்க்கான அறிகுறிகள் தான் என்று அடையாளம் காண்பது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை.

55 ஆண்களை காட்டிலும், 55 வயதுக்குட்பட்ட பெண்களில் கணையப் புற்றுநோய் 2.4 சதவீதம் அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். பெண்களிடையே கணைய புற்றுநோயின் விகிதம் வேகமாக அதிகரித்து வருகிறது என்று அமெரிக்க ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

2001 மற்றும் 2018ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட டேட்டாக்களின்படி, இரு பாலினத்தவர்களிடமும் புற்றுநோய்க்கான விகிதங்கள் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகளுக்கு மஞ்சள் காமாலை தான் முதல் அறிகுறியாக வெளிப்படுகிறது.

மஞ்சள் காமாலை நோய் வந்தால் நோயாளியின் கண்கள் மற்றும் தோலின் நிறம் மஞ்சளாக காட்சியளிக்கும். பித்த நாளத்திற்கு அருகில் புற்றுநோய் கட்டிகள் உருவாகும் போது மஞ்சள் காமாலை ஏற்படுகிறது, இந்த புற்றுநோய்கள் குழாயில் அழுத்தி மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!