‘என் மகள் பெயரை யாரும் வைக்க கூடாது’ வைத்தால் மரணம் தான்!

உலகிலேயே அதிக கட்டுப்பாடுகள் நிறைந்த நாடு வடகொரியா. சிறிய குற்றங்களுக்கு கூட மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அங்கு நடக்கும் பல விஷயங்கள் வெளி உலகிற்கு தெரிவதில்லை.

செய்திகள் கூட அரசின் தணிக்கைக்கு பிறகே வெளியிடப்படும். அங்குள்ள மக்கள் பெரும்பாலும் உலக தொழில்நுட்பத்தை அறியாத மக்களாக உள்ளனர்.

இந்தநிலையில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், தனது மகளின் பெயரை (ஜூ ஏ) வேறு யாருக்கும் வைக்கக்கூடாது என வினோத தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கடந்த நவம்பர் மாதம் கிம் முதல் முறையாக தனது மகளை பொது வெளியில் அறிமுகப்படுத்தினார். கிம் மகளின் பெயரை வைத்திருக்கும் பெண்கள், ஒரு வாரத்தில் பெயரை மாற்றவேண்டும் என உத்தரவிட்டிருப்பதாகவும், இதுதொடர்பாக அந்தந்த பகுதி அரசு நிர்வாகங்கள் உரிய உத்தரவுகளை பிறப்பித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக உள்ளூர் தகவல்களை மேற்கோள் காட்டி ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவல் வட கொரிய மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

பெயரை மாற்ற வேண்டிய சூழலில் லட்சக்கணக்கான வடகொரியர்கள் உள்ளனர். வடகொரிய தலைவர் கிம்மின் மூன்று குழந்தைகளில் இந்த மகளை மட்டுமே அவர் பொதுவெளியில் காட்டியிருக்கிறார்.

கிம் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்தார் என்றும், அவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் என்றும் தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!