டெண்டுல்கரை சந்தித்த நடிகர் சூர்யா.. வைரலாகும் புகைப்படம்!

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா, தற்போது ‘சிறுத்தை’, ‘வீரம்’, ‘விஸ்வாசம்’, ‘அண்ணாத்த’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் சூர்யா நேற்று மும்பையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரன் சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்த சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!