திருமணமான 3 நாட்களில் புதுமண தம்பதிக்கு நேர்ந்த சோகம்!

ஆந்திர மாநிலம் இச்சாபுரம் பகுதியை சேர்ந்தவர் பினு (வயது 27). இவருக்கும் ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் பிர்ஹம்பூர் பகுதியை சேர்ந்த பிரதினாவுக்கும் (வயது 22) கடந்த சனிக்கிழமை திருமணம் நடைபெற்றது.

3 நாட்களுக்கு முன் திருமணமான நிலையில் பினு தனது மனைவி பிரதினாவை அழைத்துக்கொண்டு இன்று பைக்கில் தன் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

கஞ்சம் மாவட்டம் கொலந்தரா பகுதியில் சென்றபோது சாலையில் எதிரே வந்த டிராக்டர் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பைக்கில் இருந்த புதுமண தம்பதி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

உடனடியாக, 2 பேரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட புதுமண தம்பதி பினு, பிரதினா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், டிராக்டர் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 நாட்களுக்கு முன் திருமணமான நிலையில் மாமியார் வீட்டிற்கு விருந்திற்க்கு சென்ற தம்பதி டிராக்டர் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!