16 வயதாகியும் எலும்பு கூடாக உள்ள சிறுமி – விசித்திர நோயால் அவதி

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், கோட்டூர் மண்டலம், லிங்க ரெட்டி பாலம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசுப்பா ராவ். இவரது மனைவி சுஜாதா தம்பதிக்கு அப்பிகட்லா அலேக்யா (16) என்ற மகள் உள்ளார்.

இவர் பிறந்தது முதல் உடல் வளர்ச்சி இல்லாமல் எலும்பு கூடாக உள்ளார். கூலி தொழிலாளர்களான தம்பதியர் உழைத்து சம்பாதிக்கும் பணம் முழுவதும் மகளுக்கு சத்தான உணவு மற்றும் மருத்துவத்துக்கு செலவாகிறது.

மகளின் இந்த விசித்திர நோயை சரி செய்வதற்காக பல்வேறு டாக்டர்களிடம் காண்பித்தும் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எழுந்து நடக்க கூட முடியாத நிலையில் உள்ள மகளை அவரது தாய் சிரமப்பட்டு வளர்த்து வருகிறார்.

தற்போது சிறுமிக்கு அரசிடம் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

இருப்பினும், நேற்று மச்சிலிப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்திற்கு தனது மகளை தூக்கி வந்த அவரது தாய், சிகிச்சைக்கான செலவைக் கருத்தில் கொண்டு கூடுதலாக உதவி தொகை கேட்டு விண்ணப்பம் அளித்தார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!