கொடை திரைவிமர்சனம்!

கதாநாயகனான கார்த்திக் சிங்கா கொடைக்கானலில் தங்கும் விடுதி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் தீயணைப்பு துறையில் பணியாற்றும் நாயகி அனயாவை காதலித்து வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க வில்லன் அஜய் ரத்னமும் அவருடைய கும்பலும் சேர்ந்து நூதன முறையில் கொடைக்கானலை மையப்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்.

நாயகன் கார்த்திக் சிங்கா ஆதரவற்ற இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு இருக்கும் குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து அவர்களுடைய கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார்.

இந்நிலையில், நாயகி அனயாவின் தந்தை கார்த்திக் சிங்காவின் ஆதரவற்ற இல்லத்திற்கு ரூ. 25 லட்சம் நன் கொடை கொடுக்கிறார். இந்த நன் கொடையை வில்லன் அஜய் ரத்னம் கும்பல் மோசடி செய்து பரித்து விடுகின்றனர்.

இந்த பணத்தை வில்லன் வழியில் சென்று மீட்க கார்த்திக் சிங்கா திட்டமிடுகிறார். இறுதியில் கார்த்திக் சிங்கா தன் திட்டத்தில் வெற்றி பெற்றாரா? இல்லையா? தன் காதலியை கரம் பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. நாயகன் கார்த்திக் சிங்கா ஆக்‌ஷன், நடனம் என அனைத்திலும் தனது முயற்சியை வெளிப்படுத்தி சிறப்பாக நடித்துள்ளார்.

நாயகி அனயா தனக்கான கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் எமோஷன்ஸ் மற்றும் செண்டிமெண்ட் மூலம் கவர்ந்துள்ளார்.

இயக்குனர் ராஜ செல்வம் திரைக்கதை இந்த காலத்திற்கு பொருந்தாததாக உள்ளது. கதை எதை நோக்கி செல்கிறது. அதன் நோக்கம் என்ன என்பதே கிளைமேக்ஸில் தான் தெளிவாகிறது.

லவ், காமெடி, ஆக்‌ஷன் என எல்லாம் ஒன்று சேராமல் ரசிகர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. இசையமைப்பாளர் சுபாஷ் கவி பின்னணி இசை கவனிக்க வைக்க தவறியுள்ளது.

கொடைக்கானலை மிகவும் அழகாக காண்பித்து கண்களுக்கு விருந்தளித்துள்ளார் ஒளிப்பதிவாளர் அர்ஜுன் கார்த்திக். மொத்தத்தில் கொடை -கவனம் தேவை.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!