90 மணி நேர போராட்டம் – பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்பு.!

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் திங்கட்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதினானது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் துருக்கி – சிரியாவின் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியன.

நிலநடுக்கம் அதிகாலை ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறக்கொண்டிருந்த நேரத்தில் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதனிடையே துருக்கி – சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ளது.

மேலும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி , சிரியாவுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இதில், பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கட்டிட இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கிய அந்த பச்சிளம் குழந்தை 90 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

யாஹிஸ் உலஸ் என்ற அந்த பச்சிளம் குழந்தையின் தாயாரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!