சூரியனின் மேற்பரப்பில் திடீரென உடைப்பு.. நெருப்பு சூறாவளி.. பூமிக்கு ஆபத்தா!

சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் மற்றும் வால் நட்சத்திரங்கள் பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். விண் வெளியில் நிகழும் மாற்றங்கள், நிகழ்வுகள் ஆகியவற்றை கண்காணித்து வருகிறார்கள்.

இதுதொடர்பாக ஆய்வு முடிவுகளை விஞ்ஞானிகள் வெளியிட்டு வருகிறார்கள். சூரியனையும் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள். சூரியனில் இருந்து வெளியேறும் காந்த புயல் உள்ளிட்டவற்றை கண்காணிக்கிறார்கள்.

இந்த நிலையில் சூரியனின் மேற்பரப்பில் ஒரு பகுதி உடைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியனின் மேற்பரப்பிலிருந்து ஒரு பெரிய துண்டு உடைந்துள்ளதாகவும் அது சூரியனின் வட துருவத்தில் ஒரு பெரிய நெருப்பு புயலை போல சுற்றி வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த நெருப்பு சூறாவளி சூரியனின் மேற்பரப்பு சுழன்று வருவதாக தெரிவித்தனர். இது எப்படி நிகழ்ந்தது என்று விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

சூரியனின் மேற்பரப்பில் ஒரு பகுதி உடைந்த நிகழ்வை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி பதிவு செய்துள்ளது.

அந்த ஆராய்ச்சியை விண்வெளி ஆராய்ச்சியாள் அர் டாக்டர் தமிதா ஸ்கோவ் தனது டுவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், துருவ சூழலை பற்றி பேச்சுக்கள் நடந்து வருகிறது. சூரியனின் வடக்கு பக்கத்தின் மேற்பரப்பில் ஒரு பெரிய பகுதி உடைந்துவிட்டது.

அது சூரியனின் வட துருவத்தில் சுற்றி வருகிறது. அதன் தாக்கத்தை பற்றி ஆராய்ந்து வருகிறோம்' என்றார். சூரியனில் அடிக்கடி சூறாவளிகள் ஏற்படுவதுண்டு. இந்த சூரிய புயல்களால் தகவல் தொழில் நுட்ப தொடர்புகள் பாதிக்கப்படும்.

ஆனால் தற்போது சூரியனின் வடக்கு பகுதியில் ஒரு துண்டே உடைந்து பெரிய அளவில் நெருப்பு சூறாவளி சுற்றி வருவதால் அது பூமிக்கு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

பல ஆண்டுகளாக சூரியனை ஆய்வு செய்து வரும் அமெரிக்க தேசிய வளிமண்டல ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் ஸ்காட் மெக்கிண்டோவ் கூறும்போது,சூரியனில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதி உடைந்தது போன்ற ஒரு சூழலை இதுவரை நான் பார்த்ததில்லை.’ என்றார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!