துருக்கி -சிரியா நிலநடுக்கம் அமெரிக்கா சதியா…?

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் திங்கட்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதினானது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் துருக்கி – சிரியாவின் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியன.

நிலநடுக்கம் அதிகாலை ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறக்கொண்டிருந்த நேரத்தில் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதனிடையே துருக்கி – சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ளது.

மேலும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதற்கிடையில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் அமெரிக்காவின் சதியாக இருக்கலாம் என்று சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் இது இயற்கையான நிலநடுக்கம் தான என பலர் மறுத்து வருகின்றனர். பிளாட் எர்த் சோன் என்பவர் தனது டுவிட்டரில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையை மேற்கோள் காட்டி துருக்கியில் நிலநடுக்கத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, வானத்தில் ஒரு விசித்திரமான மேகம் தோன்றியது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அந்த மேகத்தையும் பூகம்பத்தின் மையத்தையும் பாருங்கள். இது லெண்டிகுலர் மேகம் என்று அழைக்கப்படுகிறது, இது ஒரு இயற்கை நிகழ்வாகும் என கூறி உள்ளார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!