பாலிவுட் நடிகருடன் தமிழ் நடிகை காதல்… கைகோர்த்து சுற்றும் புகைப்படம்!

பாலிவுட் முன்னாள் நடிகர் இம்ரான் கான் நடிப்பில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில் இம்ரான் கானும் தென்னிந்திய நடிகை லேகா வாஷிங்டன்னும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இருவரும் கைகோர்த்தபடி சுற்றி வரும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. வெளியான படங்களில், கருப்பு டி-சர்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்து எளிமையான தோற்றத்தில் இம்ரான் கான் இருக்கிறார்.

லேகா கருப்பு நிறத்தில் அச்சிடப்பட்ட அழகான உடை அணிந்துள்ளார். இருவரும் கைகளை பிடித்தபடி வெளியே வருகிறார்கள். விரைவில் அந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதிலிருந்து நட்சத்திரங்கள் காதலிப்பது தெளிவாகத் தெரிகிறது என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் தனக்கும் லேகாவுக்கும் இடையேயான காதல் கிசுகிசுக்களுக்கு இம்ரான் கான் இதுவரை பதிலளிக்கவில்லை.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!