முகத்தை பொலிவாக்கும் சிவப்பு சந்தனம்!

இயற்கை பொருள்களை வைத்து சருமத்தை எவ்வித பக்க விளைவுகள் இன்றி அழகாக மாற்றலாம். சிவப்பு சந்தனம் (red sandalwood) சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எளிதில் நீக்க வல்லது.

அனைத்து விதமான சரும பிரச்சனைகளையும் தீர்க்கும் சிவப்பு சந்தனத்தை எப்படி, எதனுடன் சேர்த்து பயன்படுத்துவது என இங்கு காண்போம்.

* சிவப்பு சந்தனம் (red sandalwood) சருமத்தில் சொரசொரவென்று இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றி சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.

* பருக்களால் வந்த தழும்புகள் முக அழகைக் கெடுக்கும். அதனை சிவப்பு சந்தனம் கொண்டு எளிதில் போக்கலாம்.

*வெயிலில் அதிகம் சுற்றி சருமம் கருமையாக இருப்பவர்கள் சிவப்பு சந்தனத்தை பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும்.

* முகப்பரு மற்றும் அதனால் உண்டாகும் பருக்களால் அவதியுறுபவர்கள் சிவப்பு சந்தனத்தை தொடர்ந்து பயன்படுத்த வர விரைவில் சரியாகும்.

* சருமத்தை புத்துணர்ச்சியுடன் வெளிக்காட்ட ஒரு டேபிள் ஸ்பூன் சிவப்பு சந்தனத்தை 2 டேபிள் ஸ்பூன் மசித்த பப்பாளியுடன் சேர்த்து முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

* எண்ணெய் பசையை நீக்க 1 டேபிள் ஸ்பூன் சிவப்பு சந்தனப் பொடியில், 1 எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமத் துளைகள் இறுக்கமடைந்து எண்ணெய் பசை நீங்கும்.

பாதாம் ஆயில், தேங்காய் எண்ணெய், சிவப்பு சந்தன பவுடர் சேர்த்து கலந்து முகத்தில் போட்டு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடவும். இந்த பேக் சருமத்தை பொலிவாக்கும்.

* சரும பிரச்சனைகளை போக்க ஆரஞ்சு தோல் பவுடர் 1 டீஸ்பூன், சிவப்பு சந்தன பவுடருடன் கலந்து அதில் ரோஸ்வாட்டர் ஊற்றி பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவி விடவும்.

* 4 டீஸ்பூன் சிவப்பு சந்தனப் பொடியில் 2 டீஸ்பூன் சீமைச்சாமந்தி டீ சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.

* சிவப்பு சத்தனம் பவுடர், வேப்பிலை பவுடர் சமஅளவில் எடுத்து கலந்து அதில் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவி விடவும். இந்த பேக் பருக்கள் மற்றும் பருவால் வரும் தழும்பு, கரும்புள்ளிகளை நீக்கும்.

வறண்ட சருமம் உள்ளவர்கள் சிவப்பு சந்தனத்துடன் (red sandalwood) பால், தேன் சேர்த்து கலந்து முகத்தில் போட்டு 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும்.

* ஒரு டீஸ்பூன் சிவப்பு சந்தனதூளுடன், சிறிது காய்ச்சாத பச்சைப்பால் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசி உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் முகம் கழுவவும். இதனை தொடர்ந்து செய்து வந்ததால் வெயிலில் கருத்த தோலின் நிறம் பொலிவு பெறும். வறண்ட தோல் மென்மையாகும்.

* கோடை வெயிலில் கருத்த சருமத்தில் வெள்ளரிச்சாறு அல்லது தயிருடன் சிவப்பு சந்தனதூள் கலந்து பூசி வந்தால் கருமை குறைந்து தோல் பொலிவு பெறும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!