இன்று அந்தமான் தீவுகளில் 5.6 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்..!


அந்தமான் தீவுகளில் இன்று காலை 8.09 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இது மையம் கொண்டிருந்தது. ரிக்டர் அளவுகோலில் இது 5.6 அலகாக பதிவாகியிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்போ, சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. ரிக்டர் அளவில் 6-க்கும் அதிகமாக நிலநடுக்கம் ஏற்பட்டால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.


மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் பூகம்ப மண்டலத்தில் அந்தமான் தீவுகள் உள்ளன. இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. கடைசியாக ஜனவரி 14-ம் தேதி அந்தமான் தீவுகளில் 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!