முன்பதிவு வசூலால் கேஜிஎப்-2 வின் வாழ்நாள் வசூலை முறியடித்த பதான்!

பதானுக்கு ஜெர்மனி மட்டுமல்ல, ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிலும் பதானுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடித்துள்ள பதான் திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஜனவரி 20ஆம் தேதி முதல் முன்பதிவு தொடங்கும் நிலையில், ஸ்பை ஆக்ஷன் திரில்லர் படமான பதானுக்கு பாக்ஸ் ஆபிஸ் வசூல் தொடக்க நாளில் ரூ.40 கோடிக்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதான் வணிக ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது ஏற்கனவே ஜெர்மனியில் கேஜிஎப் அத்தியாயம் 2 இன் வாழ்நாள் வசூலை வெறும் முன்பதிவு வசூலால் முறியடித்துள்ளது. பதான் ஜெர்மனியில் 8500 டிக்கெட்டுகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது.

வெறும் முன்பதிவு மூலம் 1.5 லட்சம் யூரோக்கள் வரை வசூலித்துள்ளது.பதான் டிசம்பர் 2022 இல் ஜெர்மனியில் முன்பதிவு தொடங்கப்பட்டது.

ஜெர்மனியில் பதானின் முன் உள்ள அடுத்த இலக்கு பொன்னின் செல்வன் 1 ஆகும், இது ஐரோப்பாவில் 1. 55 லட்சம் யூரோக்கள் வசூல் செய்து வெற்றி பெற்ற தென்னிந்திய திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது.

ஜெர்மனி மட்டுமல்ல, ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிலும் பதானுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!