பிக்பாஸ் கேப்டன்ஸி டாஸ்க் பயங்கரமா இருக்கே… வேற லெவல்.!

தனலட்சுமியை விரட்டிவிட்டுட்டு கேப்டன்ஸி டாஸ்க் தொடர்பான ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளார் பிக் பாஸ்.

பிக் பாஸ் வீட்டின் இந்த வாரத்திற்கான கேப்டனை தேர்வு செய்ய பலே டாஸ்க் கொடுத்து ப்ரொமோ வீடியோ வெளியிட்டுள்ளனர்.
உங்கள் கிறிஸ்துமஸை சிறப்பிக்க எலக்ட்ரானிக்ஸில் 45% வரை தள்ளுபடி
கேப்டன்

பிக் பாஸ் 6 வீட்டில் இருக்கும் கொஞ்ச நஞ்ச பேருக்கு ஒரு கேப்டனை தேர்வு செய்யும் வேலையை துவங்கிவிட்டார்கள். ரேங்கிங் டாஸ்கில் முதல் இரண்டு இடத்தை பிடித்த அமுதவாணன் மற்றும் அசீம், ஆக்டிவிட்டி ஏரியாவில் பரவியிருக்கும் கிஃப்ட்டுகளை சேகரித்து உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பெட்டியில் போட வேண்டும் என்று மைனா நந்தினி சொல்வதுடன் ப்ரொமோ வீடியோ துவங்கியிருக்கிறது.

அசீம்

ஒவ்வொரு முறையும் ஒரு கிஃப்ட் மட்டுமே எடுக்கலாம். அதிக கிஃப்ட்டுகள் சேகரித்த போட்டியாளர் இந்த வாரத்திற்கான தலைவராக தேர்வு செய்யப்படுவார் என மைனா தொடர்ந்து வாசிக்க அசீமும், அமுதவாணனும் கிஃப்ட்டுகளை சேகரிக்க மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள். மாத்தி யோசிக்க சொன்னதால் இப்படி ஒரு டாஸ்க் போன்று.

தனலட்சுமி

தனலட்சுமியே வெளியே போயிடுச்சு. இனிமேல் நீங்க என்ன செய்தால் எங்களுக்கு என்ன. இந்த டாஸ்க்கும் மொக்கையாகத் தான் உள்ளது. இனிமேல் நிகழ்ச்சியின் டி.ஆர்.பி. படுத்து தூங்கப் போகிறது பிக் பாஸ். இந்த வாரம் அசீமை வெளியேற்றிவிட்டால் பிக் பாஸ் வீட்டிற்கு பூட்டு போட்டு பூஜை செய்துவிடலாம் என பார்வையாளர்கள் கோபமாக தெரிவித்துள்ளனர்.

கமல்

டாப் 5 இடத்தில் வர வேண்டிய போட்டியாளர் தனலட்சுமி. அவரை ஏன் வெளியேற்றினீர்கள் கமல் சார்?. இந்த வாரம் அசீம் கேப்டன் ஆக வேண்டும். அமுதவாணன் வெளியே செல்ல வேண்டும். வழக்கமாக மணிகண்டனை தானே கேப்டன் ஆக்கி அழகு பார்ப்பீர்கள்.

அப்படி இருக்கும்போது இந்த வாரம் என்ன அமுதுவை களத்தில் இறக்கிவிட்டிருக்கிறீர்கள். வார இறுதி நாட்களில் கூட பிக் பாஸ் போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது என்கிறார்கள் பார்வையாளர்கள்.

விக்ரமன்

வார வாரம் பிக் பாஸ் வீட்டிற்கு வர வேண்டியது, அசீமை ரோஸ்ட் செய்ய வேண்டியது. விக்ரமனுக்கு ஜிங்ஜாக் அடிக்க வேண்டியது. என்ன ஆண்டவரே இப்படி மாறிட்டீங்க. இதை சத்தியமாக உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.

எங்களுக்கு கடந்த 5 சீசன்களில் இருந்த கமல் ஹாசன் தான் வேண்டும். இந்த கமல் சார் விக்ரமனின் கையாள் போன்று இருக்கிறார் என பிக் பாஸ் பார்வையாளர்கள் சமூக வலைதங்களில் தெரிவித்து வருகிறார்கள். மேலும் மீம்ஸ் போட்டும் கலாய்க்கிறார்கள்.

கதிரவன்

மைனா நந்தினியும், இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் கதிரவன், ரச்சிதா மகாலட்சுமியும் என்ன பெரிதாக செய்துவிட்டார்கள் என்று அவர்களை எல்லாம் காப்பாற்றிவிட்டு தனலட்சுமியை வெளியேற்றினீர்கள் என்பது எங்களுக்கு இப்பவே தெரிந்தாகணும் பிக் பாஸ் என பார்வையாளர்கள் கொந்தளிக்கிறார்கள்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!