பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் எலிமினேட் ஆன முக்கிய போட்டியாளர்!

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ள போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் நடக்கும். அதில் குறைந்த வாக்குகளை பெறும் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.

அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ள போட்டியாளர் குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 6 ல் ஜி.பி. முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவாஷினி, மைனா நந்தினி மற்றும் தனலெட்சுமி ஆகிய போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி 10 வாரங்கள் கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பிக்பாஸ் வீட்டிலிருந்து மெட்டி ஒலி சீரியல் நடிகை சாந்தி, அசல் கோலார், மகேஸ்வரி, நிவாஷினி, செரீனா, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா மற்றும் ஜனனி ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆகியுள்ளனர்.

இந்நிலையில் இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் முக்கிய போட்டியாளர்களான அனைவரும் நாமினேஷன் லிஸ்டில் சிக்கியுள்ளனர். இதில் யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதன்படி பிக்பாஸ் வீட்டில் கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற நாமினேஷனில், அசீம், விக்ரமன், ஷிவின், ரச்சிதா, கதிரவன், மைனா மற்றும் தனலெட்சுமி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

இந்நிலையில் இதில் குறைந்த வாக்குகள் பெற்று தனலட்சுமி பிக்பாஸ் வீட்டை வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மைனா போல் மிக்சர் சாப்பிட்டு கொண்டிருக்காமல் பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்து ஆக்டிவாக இருந்து வரும் தனலட்சுமியை வெளியேற்றுவது நியாயமே இல்லை என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

மேலும் அவர் இல்லாத பிக்பாஸ் வீட்டில் சுவாரஸ்யமே இருக்காது என்றும் கூறி வருகின்றனர். ஆனாலும் சக போட்டியாளர்களின் கருத்துக்களை காதில் கூட வாங்காமல், அனைவரிடமும் திமிராக நடந்து கொள்ளும் தனலட்சுமி வெளியேற்றப்பட்டது சரிதான் என்றும் சிலர் கமெண்ட் அடித்து வருகின்றனர். கடந்த வாரமே பிக்பாஸ் வீட்டிலிருந் ஏடிகேவிற்கு பதிலாக ஜனனி வெளியேற்றப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!