கொரோனா பாதிப்பை வேண்டும் என்றே வரவழைத்து கொண்ட பிரபல பாடகி!

ஜாங் தனது புத்தாண்டு நிகழ்ச்சியின் போது நோய்த்தொற்றின் அபாயத்தை எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காக முன்னதாகவே கொரோனா பாதிப்பை வேண்டும் என்றே வரவழைக்க விரும்புவதாக கூறினார்.

சீனா கொடிய கொரோனா மாறுபாடான ஒமைக்ரான் பிஎப்7 வைரஸ் அலையை எதிர்த்துப் போராடி வருகிறது. இந்த நிலையில் சீனாபாப் பாடகி ஜேன் ஜாங் லியாங்யின் (38) பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து வேண்டுமென்றே கொரோனா பாதிப்பை வரவழைத்து கொண்டதாக அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்திள்ளது.

சீனாவை சேர்ந்த பிரபல பாடகி ஜேன் ஜாங் இவருக்கு சமூக வலைத்தளத்தில் 4.3 பாலோயர்கள் உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் அவர் தனது சமூக வலைப்பக்கத்தில் கொரோனாவிற்கு தயாராகி வருவதாகத் தெரிவித்திருந்தார்.

ஜாங் தனது புத்தாண்டு நிகழ்ச்சியின் போது நோய்த்தொற்றின் அபாயத்தை எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காக முன்னதாகவே கொரோனா பாதிப்பை வேண்டும் என்றே வரவழைக்க விரும்புவதாக கூறினார். “புத்தாண்டு நிகழ்ச்சியின் போது எனது உடல்நிலை பாதிக்கப்படும் என்று நான் கவலைப்பட்டேன்.

எனவே வைரசிலிருந்து மீள எனக்கு தற்போது நேரம் இருப்பதால் நேர்மறை சோதனை செய்த கொரோனா பாதிப்பு குழுவை நான் சந்தித்தேன், “என்று அவர் ஒப்புக்கொண்டார்.

அதன்பின் மறுநாள் தனக்கு காய்ச்சல், தொண்டை புண் மற்றும் உடல் வலி ஆகியவை கொரோனா வைரஸுடன் தொடர்புடையவை என்று கூறினார்.தனது அறிகுறிகள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களைப் போலவே இருந்தாலும், அவை ஒரு நாள் மட்டுமே நீடித்ததாக அவர் கூறினார்.

“ஒரு இரவும் பகலும் தூங்கிய பிறகு, எனது அறிகுறிகள் அனைத்தும் மறைந்துவிட்டன … நான் குணமடைவதற்கு முன்பு எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல், நிறைய தண்ணீர் குடித்தேன் மற்றும் வைட்டமின் சி எடுத்துக் கொண்டேன்,” என்று ஜாங் கூறினார்.

இப்படியொரு பொறுப்பில்லாத செயலை செய்ததாக சீன பாடகிக்கு கண்டனங்கள் குவிந்தன. விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகு, ஜாங் முந்தைய பதிவுகளை நீக்கிவிட்டு, அதற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகப் பதிவிட்டுள்ளார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!