குளிர் காலத்தில் உதடு வறண்டு போகிறதா? பசு நெய்யை இப்படி பயன்படுத்துங்க…!


வெண்ணெயை உருக்கினால் நமக்கு மணமணக்கும் நெய் கிடைக்கும். பெரும்பாலும் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் பெரும்பான்மையான வீடுகளில் பருப்பு, ரொட்டி, தோசை ஆகியவற்றில் தினந்தோறும் நெய் சேர்க்கப்படுகிறது. எல்லா வகையான இனிப்புகளிலும் நெய் சேர்க்கப்படுகிறது. நெய் சேர்க்காத இனிப்பு வகைகள் மிக மிகக் குறைவு.

நெய் உணவில் மட்டுமல்ல, அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுத்த முடியும். சருமத்தைப் பொலிவுடன் வைத்துக் கொள்வதில் நெய் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, பளபளக்கும் மென்மையான உதடுகள் வேண்டுமென நினைத்தால் பசு நெய்யை தினமும் பயன்படுத்தலாம்.

குளிர்காலங்களில் உதடுகள் வறட்சியடைவதோடு வெடிக்கவும் செய்யும். எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய பருவ காலம் இது. அதனால் உடல் மற்றும் உதடுகளில் ஈரப்பதம் குறைந்து, வறட்சியுடன் காணப்படும். நெய்யை தினந்தோறும் பயன்படுத்துவதன் மூலம் இந்த வறட்சியைத் தடுக்க முடியும்.


பயன்படுத்தும் முறை

சில துளிகள் நெய்யை எடுத்து சூடாக்கவும்.

சூடாக இருக்கும் நெய்யுடன் 2 துளிகள் தேன் சேர்க்க வேண்டும்.

இந்த கலவையை எடுத்து உதட்டில் தடவி, நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.

தினமும் இரவு தூங்கச் செல்லும் முன்பு, இதைத் தொடர்ந்து செய்து வந்தால் உதடுகளில் வறட்சி நீங்குவதோடு, மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறிவிடும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!