பிக்பாஸ் வீட்டில் எலிமினேட் ஆகியுள்ள போட்டியாளர் இவரா..? ரசிகர்கள் அதிர்ச்சி.!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் குறைந்த வாக்குகள் அடிப்படையில் எலிமினேட் ஆகியுள்ள போட்டியாளர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியின் சீசன் 6 ல் ஜி.பி. முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவாஷினி, மைனா நந்தினி மற்றும் தனலெட்சுமி ஆகிய போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் மக்களுக்கு பிடித்த போட்டியாளரான ஜிபி முத்து தனது குடும்பத்தினர் நியாபகமாக இருப்பதாக கூறி பிக்பாஸ் வீட்டை விட்டு அவராகவே வெளியேறினார்.

அதன்பின்னர் மெட்டி ஒலி சீரியல் நடிகை சாந்தி, அசல் கோலார், மகேஸ்வரி, நிவாஷினி, செரீனா, ராபர்ட் மாஸ்டர் மற்றும் குயின்ஸி ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆகியுள்ளனர்.

கடந்த வாரம் டபிள் எவிக்சன் நடந்தது. இதில் நாமினேஷன் லிஸ்டில் அசீம், ஜனனி, கதிரவன், ஏடிகே, ஆயிஷா, ராம் ஆகிய 6 பேர் சிக்கினர். இவர்களில் முதலில் ராமும் அதனை தொடர்ந்து ஆயிஷாவும் வெளியேற்றப்பட்டனர். ஆனால் ஜனனியை விட ஆயிஷா நன்றாக விளையாடியதாகவும், இந்த எலிமினேஷன் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருப்பதாகவும் பிக்பாஸ் ரசிகர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில் இந்த வாரம் அசீம், விக்ரமன், ஜனனி, ஏடிகே, ரக்சிதா, மணிகண்டன் ஆகிய 6 போட்டியாளர்கள் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதில் மணிகண்டன் குறைந்த வாக்குகள் பெற்று டேஞ்சர் ஜோனில் இருக்கிறார். இதனால் அவர் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது ஏடிகே வெளியேற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாகவே டாஸ்கில் தீவிரமாக விளையாடி வரும் ஏடிகே, அசீமுக்கும் கடும் சவாலாக உள்ளார். இந்நிலையில் இந்த வாரம் ஏடிகே எலிமினேட் ஆகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!