சினிமா பாடலுக்கு நடனமாடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட 4 பெண் போலீசார் சஸ்பெண்ட்!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத கடவுள் ராமரின் வழிபாட்டு தலம் கட்டும்பணிகள் ராம ஜென்மபூமி என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், ராமஜென்ம பூமி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் கான்ஸ்டபிள்கள் 4 பேர் பணியின் போது போஜ்புரி பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.

3 கான்ஸ்டபிள்கள் நடனமாட அதை மற்றொரு பெண் கான்ஸ்டபிள் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

பணியின் போது பெண் கான்ஸ்டபிள்கள் சினிமா பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் 4 பெண் போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!