சிறையிலிருந்து முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் விடுதலை!

முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் (54). இவர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை முறை வென்றவர். லண்டனில் வசித்து வரும் போரிஸ் பெக்கர் கடந்த 2002-ம் ஆண்டு வரி ஏய்ப்பு புகாரில் சிக்கினார்.

அப்போது இவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டது. தனியார் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் கடனாக வாங்கிய அவர் அதை திருப்பிச் செலுத்தாமல் தன்னை 2017-ல் திவாலானவராக அறிவித்தார்.

சொத்துக்களை மறைத்து ஏமாற்றியதாக 20 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டது. இதுதொடர்பான வழக்கு இங்கிலாந்தின் சவுத் வார்க் கிரவுன் கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட பெக்கருக்கு இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. திவால் வழக்கு என்பதால் தண்டனை காலம் குறைக்கப்பட்டதால், சில மாதங்கள் பெக்கர் சிறையில் இருக்க நேர்ந்து.

இந்நிலையில், போரிஸ் பெக்கர் நேற்று சிறையில் இருந்து விடுதலையானார். விடுதலையானதும் அவர் தனது தாய்நாடான ஜெர்மன் சென்றார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!