விலை உயர்ந்த கார்களை வாங்கி குவிக்கும் ஐதராபாத் தொழிலதிபர்!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் நசீர் கான். தொழிலதிபரான இவர் புதியதாக அறிமுகப்படுத்தப்படும் விலை உயர்ந்த கார்களை வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில் ரூ.12 கோடி மதிப்பிலான 2 கார்களை மெக்லாரன் நிறுவனம் மெக்லாரன் 765, எல்.டி.ஸ்பைடர் என்ற புதிய வகை காரை மும்பையில் அறிமுகப்படுத்தியது. இந்த கார் கூபே போன்று ஏரோ டைனமிக் வடிவமைப்பை கொண்டது.

காரின் மேற்கூரை 11 வினாடிகளில் விரிவடைந்து திறக்கும் வடிவமைப்பை கொண்டது. 4.0 ட்விண்டர் போசார்ஜ் செய்யப்பட்ட வி.8 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

7 கியர்களைக் கொண்ட இந்த டார்போ கார் உடனடியாக வேகம் எடுக்கும் சக்தி கொண்டது. ரூ.12 கோடி மதிப்பிலான இந்த காரை முதல் முறையாக நசீர்கான் வாங்கினார். 2-வது காரை கொல்கத்தாவை சேர்ந்த மற்றொரு தொழிலதிபர் வாங்கி உள்ளார்.

நேற்று ஐதராபாத்தில் உள்ள தாஜ் பலக்னுமா அரண்மனையில் நடந்த விழாவில் இந்த கார் நசீர்கானிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர் ஏற்கனவே ரோல்ஸ் ராய்ஸ் குல்லினன் பிளாக் பேட்ஜ், பெர்ராரி 812 சூப்பர் பாஸ்ட், மெர்சிடிஸ் பென்ஸ் ஜி 350 டி, போர்டு மாஸ்டாங், லம்போகினி அவென்டடோ, லம்போகினி உருஸ் என பல வகையான விலை உயர்ந்த கார்களை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!