உயிருடன் இருக்கும் உலகின் 3 மெகா தந்தைகள்… இத்தனை குழந்தைகளா..?

பாகிஸ்தானை சேர்ந்த அப்துல் மஜீஸ் என்பவர் 6 மனைவிகள் மற்றும் 54 குழந்தைகளைப் பெற்று தனது குழந்தைகளை வளர்த்து, நிதி நெருக்கடியில் போராடி காலமானார். இவரை விட அதிகமான குழந்தைகளைப் பெற்றெடுத்து வளர்க்கும் எத்தனையோ தந்தைகள் உலகில் உள்ளனர்.

ஜிம்பாப்வேயைச் சேர்ந்த டாக்டர் மிஷேக் நயன்டோரோவுக்கு 16 மனைவிகளும் அவர்கள் மூலம் 151 குழந்தைகளும் உள்ளனர்.நயன்டோரோ 1983 இல் முதல் முறையாக திருமணம் செய்து கொண்டார். 67 வயதான நயன்டோரோ, தான் குழந்தைகள் பெற்றுகொள்வதை நிறுத்தும் எண்ணம் இல்லை.

முடிந்தால் 17 வது திருமணம் செய்து கொள்வேன். “இன்றும் நான் 18 வயது இளைஞனைப் போலவே வலுவாக உணர்கிறேன், நிறுத்தும் எண்ணம் எனக்கு இல்லை.

‘எல்லா மனைவிகளையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கவும், நான் ஒரு நாளைக்கு 4 முறை உடலுறவு கொள்வேன். தொடர்ந்து குழந்தைகளைப் பெறுவதே எனது பணி வாழும் வரை அதைத் தொடருவேன் என்று நயன்டோரோ என்று அவர் கூறினார்.

அதுபோல் கனடாவின் வின்ஸ்டன் பிளாக்மோர் அதிகபட்ச குழந்தைகளை பெற்று கொண்டதில் மிகவும் பிரபலமானவர். வின்ஸ்டன் கனடாவின் மிகப்பெரிய பலதார மணம் செய்பவராக அறியப்படுகிறார்.

66 வயதான வின்ஸ்டனுக்கு 27 மனைவிகள் உள்ளனர். அவருடன் இப்போது 150 குழந்தைகள் உள்ளனர். வின்ஸ்டனின் முதல் மனைவியின் மகள் மேரி ஜேன் பிளாக்மோர் கூறும் போது தனக்கு 14 வயதாக இருந்தபோது, 40 சகோதர-சகோதரிகள் இருந்தனர், எனது தந்தைக்கு 12 மனைவிகள் இருந்தனர்.

இப்போது எனது மொத்த உடன்பிறப்புகள் 150 என கூறினார். பலதார மணம் காரணமாக, வின்ஸ்டன் மீது நீதிமன்ற வழக்கு உள்ளது அவரும் சிறைக்கு செல்ல வேண்டியிருந்தது.

ஜோ டோனர், தனது உண்மையான பெயரை ஒருபோதும் வெளியிட விரும்பாதவர், திருமணமாகாமல் சுமார் 150 குழந்தைகளுக்கு தந்தை ஆவார். அமெரிக்காவில் தொழில் ரீதியாக விந்தணு தானம் செய்பவராக இருந்த ஜோ, 2014 ஆம் ஆண்டு ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் 100 பெண்களுடன் உறவு வைத்ததாகவும், அதன் காரணமாக அவருக்கு அப்போது 30 குழந்தைகள் பிறந்ததாகவும் கூறியிருந்தார்.

ஜோ பின்னர் 2018 இல் பேஸ்புக்கில் இலவச விந்தணு தான பிரசாரத்தை தொடங்கினார்.ஜோவின் நிபந்தனை என்னவென்றால், விந்தணுக்களுக்காக பெண்கள் அவருடன் உடலுறவு கொள்ள வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், பல ஒற்றை தாய்மார்கள் ஜோவின் விந்தணுவுடன் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர்.

ஜோவுக்கு 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. 2500க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தையாகி சாதனை படைக்க விரும்புவதாகவும், ஆனால் பல காரணங்களால் தனது பிரசாரத்தை நிறுத்தியதாகவும் ஜோ கூறியிருந்தார். இவருக்கு தற்போது 52 வயது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!