அடுத்தவர்களை அட்டாக் பண்ணிக்கிட்டு.. அசீமை சுத்தமா பிடிக்கல – ஏ.டி.கே.

படுக்கையில் படுத்துக் கொண்டு ஏ.டி.கேவும், விக்ரமனும் அசீம் பற்றி புறம்பேசும் ப்ரொமோ வீடியோ வெளியாகியிருக்கிறது.

அசீமுக்கு வயது ஏறிக் கொண்டே போனாலும் மெச்சூரிட்டி இல்லை என விக்ரமனிடம் ஏ.டி.கே. தெரிவித்த ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

பிக் பாஸ் 6 வீட்டில் இருக்கும் அசீம் மீது சக போட்டியாளர்கள் செம கடுப்பில் இருக்கிறார்கள். இருந்தாலும் பார்வையாளர்கள் மத்தியில் அசீமுக்கு இருக்கும் செல்வாக்கை புரிந்து கொண்டு கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்கள்.

இந்நிலையில் தான் ஏ.டி.கே.வும், விக்ரமனும் அசீம் பற்றி பேசும் ப்ரொமோ வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள்.

ஏ.டி.கே.

அசீம் பற்றி ஏ.டி.கே. கூறியிருப்பதாவது, டயலாக் பேசிக்கிட்டு, அடுத்தவர்களை அட்டாக் பண்ணிக்கிட்டு, இவன மாதிரி ஆளுகளுடன் இந்த வீட்டில் இருக்கவே வெறுப்பாக இருக்கிறது.

பேசிட்டானு சரி நார்மலா பேசினால், மேக்சிமம் ஒரு மணிநேரம் தான் தெரியுமா என தெரிவித்துள்ளார்.

பிடிக்கல

ஏ.டி.கே. மேலும் கூறியிருப்பதாவது, நம்மை எமோஷனலா செதச்சிடுறான், கட்டிப்பிடித்து அழுதுடுறான், மச்சான் எனக்கு யாரும் நண்பர்கள் இல்லை என்கிறான்.

அப்புறம் இவனே வந்து, நான்லாம் வேற மாதிரினும் சொல்றது உண்டு. இன்னும் அந்த 18 வயசுலயே இருக்கிறான் என்று தோன்றுகிறது. அவனிடம் பேச முடியாது. அவனை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றார்.

பார்வையாளர்கள்

ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, ஏ.டி.கே.வை யாரும் குறை சொல்லக் கூடாது. அசீம் குறை சொன்னால் விக்ரமனுடன் சேர்ந்து கொள்வது. விக்ரமன் ஏதாவது பேசினால் உடனே அசீமிடம் வந்துவிடுவது.

எங்களுக்கு கூடத் தான் இந்த ஊர்க்கிழவி ஏ.டி.கே.வை பிடிக்கவில்லை. வீட்டில் இருக்க முடியவில்லை என்றால் வெளியே போகவும், உங்களை யாரும் தாங்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

எவிக்ஷன்

இந்த வார எவிக்ஷனுக்கான நாமினேஷனில் அசீமின் பெயரை பெரும்பாலான ஹவுஸ்மேட்ஸ் தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் என்ன தான் நாமினேட் செய்தாலும் அசீமை பிக் பாஸ் காப்பாற்றிவிடுவார். அப்படி இருக்கும்போது இந்த ஹவுஸ்மேட்ஸ் ஏன் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் கோபம் புரிகிறது. ஆனால் அவர்களால் அசீமை ஒன்றும் செய்ய முடியாது என்கிறார்கள் பார்வையாளர்கள். மிக்சர் மாமியான ரச்சிதா மகாலட்சுமி அல்லது மணிகண்டன் தான் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஷிவினை ஏன் நாமினேட் செய்யவில்லை என்று பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அசீம்

பிக் பாஸ் பார்வையாளர்கள் மேலும் கூறியிருப்பதாவது, அசீம் பற்றி ஏ.டி.கே. கூறியிருப்பது உண்மை தான். ஆனால் ஏ.டி.கே. ஒன்றும் உத்தமன் இல்லை. அசீமை பற்றி புரிந்து கொள்ள இத்தனை நாட்களானதா இந்த ஏ.டி.கே.வுக்கு. போயும் போயும் பூமர் அங்கிள் விக்ரமனுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார். இந்த ஊர்க்கிழவிக்கு புறம் பேசவில்லை என்றால் தூக்கம் வராது போன்று என்கிறார்கள்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!