பிரபல நடிகையை மகனே பேட்டால் தலையில் அடித்துக்கொன்றது அம்பலம்!

பிரபல நடிகையை சொத்துக்காக அவரது மகனே தலையில் அடித்து கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்காக பிரபல நடிகையை அவரது மகனே தலையில் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை வீணா கபூர். 74 வயதாகும் வீணா கபூர் ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். பல சீரியல்களிலும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். வீணா கபூருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அமெரிக்காவில் மென் பொறியாளராக உள்ளார். 43 வயதான இளைய மகன் சச்சின் வீணா கபூருடன் வசித்து வந்தார்.

நடிகையை காணவில்லை

இந்நிலையில் வீணா கபூர் வசிக்கும் குடியிருப்பின் காவலாளி நடிகை வீணா கபூரை காணவில்லை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஜூஹு போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது வீணா கபூர் வசித்து வந்த அப்பார்ட்மெண்டுக்கு அருகில் அவர் பயன்படுத்திய செல்போன் கிடந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் அவரது மகன் சச்சின் மற்றும் வீட்டு வேலைக்காரரான சோட்டு என்கிற லாலு குமாரிடன் விசாரணை நடத்தினர்.

அடித்துக் கொன்ற மகன்

விசாரணையில் சொத்துக்காக தனது அம்மாவான நடிகை வீணா குமாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் அவரது மகன் சச்சின். Base Ball பேட்டால் பல முறை வீணா குமாரின் தலையில் அடித்துக் கொன்றதாக கூறியுள்ளார் சச்சின்.

தாயுடன் ஏற்பட்ட சொத்து தகராறில் அவரை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார் சச்சின். வீணா கபூரை அடித்து கொலை செய்து விட்டு அவரது உடலை ராய்காட் மாவட்டத்தில் உள்ள ஆற்றில் வீசியதாக தெரிவித்துள்ளார்.

சின்னத்திரை பிரபலங்கள் அதிர்ச்சி

பிரபல நடிகையான வீணா கபூர் சொத்து பிரச்சனையில் பெற்ற மகனால் அடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி குறித்து அறிந்த பிரபலங்கள் பலரும் தங்களின் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சீரியல் நடிகையான நீலு கோஹ்லி இதுதொடர்பாக அளித்துள்ள பேட்டியில் வீணாவை தனக்குத் தெரிந்ததிலிருந்தே அவர் சொத்துத் தகராறில் இருந்ததை பார்த்திருக்கிறேன் என கூறியுள்ளார். வீணா கபூர் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி தன்னை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும் அந்தச் செய்தியைக் கேட்ட பிறகு தன்னால் சாப்பிட முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!