உடலில் கொழுப்பு இல்லாத வினோதமான ஒலிம்பிக் வீரர்!

பிரிட்டனை சேர்ந்த பாரா ஒலிம்பிக் வீரரான டிம் ஸ்டானிபோர்ட் ஜெனெடிக் குறைபாடு காரணமாக தனது உடலில் கொழுப்பை சேகரிக்கமுடியாமல் வாழ்ந்துவருகிறார்.

அவரின் இந்த வினோதமான வாழ்க்கைக்கு காரணம் என்ன என்பது பற்றியும் அவரை பற்றிய தகவல்கள் குறித்தும் இந்த பதிவில் விளக்கமாக காணலாம்.


அவருக்கு 10 வயதில் காது கேட்கும் திறன் குறைகிறது. அப்போதிருந்து இப்போது வரை அவர் காது கேட்கும் கருவியை பயன்படுத்திவருகிறார்.

அவருக்கு சர்க்கரை நோய் இருப்பதால் உடல் எடையை அதிகரிக்க சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரெட் உணவுகளை உட்கொள்ளமுடியாது.


உலகில் இப்போது பலர் நினைப்பது நமது உடலில் உள்ள கொழுப்புகளை எல்லாம் குறைத்து நாம் ஸ்லிம்மாக ஆரோக்கியமாக வாழவேண்டும் என்பதே. இதற்காகவே பலர் ஜிம், உடற்பயிற்சி, டயட், சிகிச்சை, விளையாட்டுகள் போன்ற பலவற்றை செய்து ஸ்லிம்மாக மாற முயற்சி எடுக்கிறார்கள்.

ஆனால் இப்படி ஸ்லிம்மாக வாழ்வதே ஒரு நோயாக மாறினால் என்ன செய்வீர்கள்? அப்படி வாழ்வது ஆரோக்யமானதே என்று நீங்கள் கருதினால் அது உண்மை அல்ல.

பிரிட்டனை சேர்ந்த ஒலிம்பிக் பாரா சைக்கிள் வீரரான டிம் ஸ்டானிபோர்ட் ஒரு சதை குறைபாடு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இதை MDP Syndrome என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகில் உள்ள மக்களில் வெறும் 8 பேர் மட்டுமே இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவருக்கு Type 2 டயாபடீஸ் அறிகுறியும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு வயது வெறும் 33 தான் ஆகிறது. சிறுவயதிலேயே அவர் தனது மொத்த எடையையும் இழந்துள்ளார். பின்னர் அவருக்கு Type 2 Diabetes இருப்பதாக அறிந்து மருத்துவ சிகிச்சைக்கு செல்கிறார்.

அவருக்கு 10 வயதில் காது கேட்கும் திறன் குறைகிறது. அப்போதிருந்து இப்போதுப வரை அவர் காது கேட்கும் கருவியை பயன்படுத்திவருகிறார்.பின்னர் அவருக்கு இந்த வினோத நோய் இருப்பது தெரிகிறது.

எப்படி அவர் சைக்கிள் வீரர்?
இந்த நோய் அவரை எந்த ஒரு விதத்திலும் பலவீனப்படுத்தவில்லை என்றே தெரிகிறது. ஏனென்றால் அவர் பிரிட்டன் நாட்டின் தேசிய பாரா சைக்ளிங் 2011 சாம்பியன் அவர். இந்த நோயுடன் அவர் ஒலிம்பிக் போட்டிகளிலும் கலந்துகொண்டுள்ளார்.

ஒரு சராசரி மனிதருக்கு இருக்கும் உடல் கொழுப்பில் வெறும் 40% மட்டுமே உள்ளது. அவருக்கு சர்க்கரை நோய் இருப்பதால் உடல் எடையை அதிகரிக்க சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரெட் உணவுகளை உட்கொள்ளமுடியாது.

உடலில் சதை இல்லாத காரணத்தால் சில வேலைகளை அவரால் செய்யமுடியாது. இதனால் ஒவ்வொரு முறையும் அவர் பலவிதமான பயிற்சிகள் மற்றும் சோதனைகளை செய்த பின்னே களத்திற்கு செல்வார்.

பெரும் விபத்து
அவர் 2006 ஆம் ஆண்டு ஒரு விபத்தில் காரின் மீது மோதி உயிருக்கே ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனை எடுத்து செல்லப்பட்டார்.

பின்னர் குணமடைந்ததும் தன் உயிரை காப்பாற்றிய அந்த நிறுவனத்திற்கு 1000 யூரோ தொகையை நன்கொடையாக அழைத்தார்.

தொடர்ந்து அவரின் தசை குறைபாடு காரணமாக உடலில் சில தசைகள் வேலை செய்யாமல் பல முறை விபத்தில் சிக்கிய அவர் தொடர்ந்து விடாமல் சைக்கிள் ஓட்டுவதை தொடர்கிறார்.

நாம் நமது உடலில் உள்ள கொழுப்புகளை எல்லாம் குறைக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் இந்த வேலையில் ஒருவர் தனது உடலில் கொழுப்புகள் இல்லாமல் சிரமப்பட்டுவருகிறார். அவரின் வாழ்க்கை உண்மையில் விநோதமாகவே உள்ளது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!