நித்தியானந்தாவை கேலி செய்யும் ஏடிகே… அதே ரைமிங்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார வீக்ளி டாஸ்க்காக டிவிங்கிள் டிவிங்கிள் பெரிய ஸ்டார். நீங்க ஆகப் போறீங்க மக்களின் ஸ்டார் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரபலமான கதாப்பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் மக்கள் மனங்களை கவர்ந்த சினிமாவில் இடம்பெற்ற நகைச்சுவை கதாப்பாத்திரங்களே கொடுக்கப்பட்டுள்ளன.

முதல் புரமோ

வைகை புயல் வடிவேலுவின் கதாப்பாத்திரங்கள் மற்றும் சினிமா மற்றும் நிஜ வாழ்க்கையில் புகழ்பெற்ற கதாப்பாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவில் போட்டியாளர்கள் ஆட்டம் பாட்டம் என கலக்கினர். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

நித்தியானந்தாவை…

அதில் முழுக்க முழுக்க ஏடிகேதான் ஃபோகஸ் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு சாமியார் நித்தியானந்தாவை இமிட்டேட் செய்வது போன்ற கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் ஏடிகேவை கன்ஃபெஷன் ரூம்மிற்கு தனியாக அழைக்கும் பிக்பாஸ் அவருக்கு தனியாக டாஸ்க் ஒன்றை கொடுக்கிறார். அதாவது அர்ஜெண்ட்டாக கழிவறையை பயன்படுத்திக்கொள்ள போகிறார்.

ஆங்கிலத்தில் ரைமிங்

அப்போது அங்கிருக்கும் காவலர் லஞ்சம் கேட்கிறார். காவலராக ஆயிஷா உள்ளார். ஆயிஷாவிடம் தனது அவரசத்தை நித்தியானந்தா ஸ்டைலில் விவரிக்கிறார் எடிகே. மேலும் நித்தியானந்தா போன்றே ஆங்கிலத்தில் ரைம்மிங்காக பேசியும் வேற லெவலில் பர்ஃபாமன்ஸ் செய்துள்ளார் ஏடிகே. அவரது பர்ஃபாமன்ஸை பார்த்த பார்த்த ஹவுஸ்மேட்ஸ் குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்கள்.

ஏடிகேவை மட்டும்

இந்த புரமோவுக்கு வரவேற்பு இருந்த போதும், ரசிகர்கள் ஏடிகேவை மட்டும் விஜய் டிவி புரமோட் செய்வதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த வாரம் ஏடிகேவை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே பிக்பாஸ் அவருக்கு மட்டும் இப்படி ஒரு கேரக்டரை கொடுத்து அவரை ஃபோகஸ் செய்கிறார் என சாடி வருகின்றனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!