டிக்டாக் பிரபலம் திடீர் மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

கனடாவை சேர்ந்த டிக்டாக் பிரபலம் மேஹா தாகூர் (வயது 21). இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மேஹா தாகூர் தனது 2-வது வயதில் கனடாவில் குடியேறினார்.

இதனிடையே, மேஹா தாகூர் டிக்டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் நடனம், இசை உள்ளிட்ட பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார். டிக்டாக்கில் மேஹாவை சுமார் 9 லட்சத்து 30 ஆயிரம் பேர் பேர் பின் தொடர்கின்றனர்.

அதேபோல், இன்ஸ்டாகிராமில் அவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில், மேஹா தாகூர் உயிரிழந்துவிட்டதாக அவரது பெற்றோர் நேற்று அறிவித்தனர். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேஹா நவம்பர் 24-ம் தேதி உயிரிழந்துவிட்டதாக அவரது பெற்றோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். உயிரிழப்பிற்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படாத நிலையில் மாரடைப்பு அல்லது கார் விபத்தில் மேஹா தாகூர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!