எவ்ளோ பெரிய ரகசியம்… அசீம் பற்றி 2 ரகசியம் சொன்ன விக்ரமன்!

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அசீம் பற்றி விக்ரமன் சில உண்மையை வெளியிட்டுள்ளார்.

நீங்க என்னுடைய ஸ்ட்ராங் பிளேயர் இல்லை அசீம் என விக்ரமன் தெரிவித்துள்ள ப்ரொமோ வீடியோ வெளியாகியிருக்கிறது.

பிக் பாஸ் 6 வீட்டில் ஏலியன், பழங்குடியின மக்கள் டாஸ்க் கொடுத்ததில் இருந்து ஹவுஸ்மேட்ஸ் எப்பொழுது பார்த்தாலும் காட்டு கத்து கத்தி பார்வையாளர்களின் காதுகளை பதம் பார்த்தார்கள். இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் இரண்டாவது ப்ரொமோ வீடியோவை பார்த்தபோது பார்வையாளர்களின் காதுகள் சற்று குளிர்ச்சி அடைந்தன.

விக்ரமன்

அடிச்சாடலாம் வானு சொன்ன அமுதவாணன் கன்னத்தில் அசீம் கை வைத்த விஷயத்தை பற்றி மீண்டும் பேசியிருக்கிறார் விக்ரமன். அவர் கூறியதாவது, ஒருவர் பேசிக்கிட்டு இருக்கும்போது கை வச்சது ரொம்ப தப்பு. அவர் வந்து லைம்லைட்டில் இருக்கணும், அட்டென்ஷன் சீக் பண்ண வேண்டும் என்பதற்காக மட்டுமே இதை பண்றார். வார வாரம் பண்றார் என்றார் விக்ரமன். அடேங்கப்பா இந்த உண்மையை, ரகசியத்தை கண்டுபிடிக்க உங்களுக்கு 54 நாட்கள் ஆச்சா விக்ரமன். இது எங்களுக்கு எப்பவோ தெரியுமே என பார்வையாளர்கள் கிண்டல் செய்கிறார்கள்.

அசீம்

விக்ரமன் சொன்னதை கேட்டுவிட்டு சும்மா இருக்கும் ஆள் இல்லை அல்லவா அசீம். பதிலுக்கு அசீம் கூறியதாவது, நீ என்னைய லைம்லைட்டுக்காக பேசுறேனு சொல்றீங்க. ஒரு ஸ்டிராங்கான கன்டஸ்டன்ட்டை பற்றி பேசினால் நமக்கான ஒரு பொசிஷன் கிடைக்கும், லைம்லைட் கிடைக்கும்னு பேசிறீங்க. நான் ஸ்டிராங்கான கன்டஸ்டன்ட்டுனு என்னை நானே நினைச்சுக்கிறேன் என்றார்.

அட்டக்கத்தி

உன்னை இன்னைக்கு சும்மாவிடுவதாக இல்லை அசீம் என்பது போன்று இருக்கிறார் விக்ரமன். நீங்க அட்டக்கத்தினு ஏற்கனவே கொடுத்துட்டேன். நீங்கள் என்னுடைய ஸ்டிராங் பிளேயரே கிடையாது என பொசுக்குனு சொன்னார் விக்ரமன். அதை கேட்ட அசீமோ, நன்றி என கூலாக கூறினார். நீ எல்லாம் ஒரு ஆளுனு நான் மதிக்கவே இல்லை விக்ரமன் என்பது போன்று உள்ளது அசீமின் செயல். இது புரியாமல் விக்ரமன் தான் அசீமை சீரியஸாக எடுத்துக் கொண்டு பேசுகிறார்.

லார்டு அசீம்

அசீமை மையமாக வைத்து வெளியான ஏழாவது ப்ரொமோ வீடியோ இது என்பது குறிப்பிடத்தக்கது. அமுதவாணன் மீது கை வைத்ததற்காக அசீமுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் வழக்கம் போன்று அசீமை திட்டுவது மாதிரி திட்டி பாராட்டுவார் ஆண்டவர். இது தெரிந்த விஷயம் தான் என்கிறார்கள் பார்வையாளர்கள்.

பூமர் அங்கிள்

ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, லார்டு அசீம் அசிங்கப்படுத்தப்பட்டார். பிக் பாஸ் வீட்டின் பூமர் அங்கிள் இந்த விக்ரமன். ஏதோ தான் தான் பிக் பாஸ் போன்று நடந்து கொள்கிறார் விக்ரமன். இரண்டும் ஒன்னுக்கு ஒன்னு சளைச்சது இல்லை என தெரிவித்துள்ளனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!