அழையா விருந்தாளியாக சாப்பிட சென்ற எம்பிஏ மாணவருக்கு ஏற்பட்ட கதி!

எம்.பி.ஏ. மாணவர் திருமண விழா ஒன்றில் அழைக்கபடா விருந்தாளியாக அங்கு இருந்த விலை உயர்ந்த உணவுகளை உண்டு உள்ளார்.

நடிகர்கள் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்த ‘3 இடியட்ஸ்’ படத்தில் உள்ளது போல் திருமண விருந்தில் அழையா விருந்தாளியாக சென்று சாப்பிடும் காட்சி திரைப்படங்களில் ஒரு நகைச்சுவை காட்சியாக வைக்கபடலாம்.

ஆனால் நிஜ வாழ்க்கையில் அழைக்கப்படாத விருந்தினர்கள் அரிதாகவே வரவேற்கப்படுகிறார்கள். எம்.பி.ஏ. மாணவர் திருமண விழா ஒன்றில் அழைக்கபடா விருந்தாளியாக அங்கு இருந்த விலை உயர்ந்த உணவுகளை உண்டு உள்ளார்.

ஆனால் அங்கிருந்தவர்கள் அவரை அடித்து உதைத்து உள்ளனர். பின்னர் பிடிபட்ட மாணவரை பாத்திரங்கள் கழுவ வைத்து உள்ளனர்.

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் போபாலில் நடந்ததாகவும், அவர் ஜபல்பூரைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!