மனோ கணேசனின் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு கொழும்பில் 10 ஆசனங்கள்…!


கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மனோ கணேசன் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, 10 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

நேற்று முன்தினம் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான மனோ கணேசன் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஏணி சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டிருந்தது.

இந்தத் தேர்தலில், அந்தக் கட்சிக்கு 27,168 வாக்குகள் கிடைத்ததன் மூலம், 10 ஆசனங்கள் கிடைத்துள்ளன. எனினும், 110 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகரசபையில், ஐதேக 60 ஆசனங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

23 ஆசனங்களுடன், சிறிலங்கா பொதுஜன முன்னணி இரண்டாவது இடத்திலும், 12 ஆசனங்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மூன்றாவது இடத்திலும் உள்ளன. 10 ஆசனங்களுடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி நான்காமிடத்திலும், 6 ஆசனங்களுடன் ஜேவிபி ஐந்தாமிடத்திலும் இருக்கின்றன. – Source : puthinappalakai.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!