பசுமாட்டின் முதலாம் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடிய தொழிலாளி!

தஞ்சை பாத்திமா நகரைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 37 ) தொழிலாளி. இவர் தனது வீட்டில் மாடுகள், கோழிகளை வளர்த்து வருகிறார். இவைகளை பெற்ற குழந்தைகள் போல் பராமரித்து வளர்த்து வருகிறார்.

அவைகளுக்கு ஒவ்வொரு பெயர் வைத்துள்ளார். இதில் ஒரு மாடு கடந்த ஆண்டு கன்று குட்டி ஈன்றது. அதற்கு தனது மகளின் விருப்பப்படி அம்சி என பெயரிட்டார்.

இந்த நிலையில் அம்சி என்ன பெயரிட்ட பசு மாடு பிறந்து ஓராண்டு நிறைவடைந்தது. இதனை குழந்தைகள் பிறந்தநாளை எப்படி கொண்டாடுவோமோ அதே போல் கொண்டாட சதீஷ் முடிவு செய்தார்.

அதன்படி தனது குடும்பத்துடன் சேர்ந்து அம்சியின் முதலாம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடினார். மாட்டை வீட்டுக்குள் ஓட்டி வந்து அதன் தலையில் அலங்கார தொப்பி வைத்தார்.

பின்னர் அவரது குடும்பத்தினர் பிறந்தநாள் பாடல் பாட கேக் வெட்டப்பட்டு மாட்டுக்கு ஊட்டினார். மேலும் அக்கம் பக்கத்தினரையும் பிறந்தநாள் விழாவுக்கு அழைத்து வந்து அவர்களுக்கும் இனிப்பு வழங்கினார்.

பசு மாட்டுக்கு பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் தஞ்சையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!