திருமணத்திற்கு 10 நாட்கள் முன் ஏற்பட்ட மாற்றத்தால் இன்று ஊரையே மெய் சிலிர்க்க வைத்த பெண்…!


குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட சிறுமி தேசிய ரக்பி அணியில் இடம்பெற்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அனுஷா என்ற 16 வயது சிறுமிக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 26 வயது வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

திருமணத்திற்கு 10 நாட்கள் முன் குழந்தைகள் உரிமை ஆணையம் மற்றும் போலீசார் அனுஷாவை மீட்டனர். குழந்தை திருமணத்திலிருந்து தப்பித்த அனுஷா விளையாட்டில் மிகவும் ஆர்வமாக இருந்தார்.

பள்ளி அளவிலான கிரிக்கெட் போட்டியில் அவரின் விளையாட்டு அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவரின் திறமையால் 19-வயதிற்குட்பட்ட ரக்பி போட்டிகாக இந்திய அணியில் அனுஷா இடம்பெற்றுள்ளார்.

அனுஷாவினை பாதுகாப்பதில் போலீஸ் துறை மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. அவளுக்கு தேவையான அனைத்து பண உதவிகளையும் செய்து கொடுக்கும் என ஆணையர் தெரிவித்தார்.

அனுஷாவின் திறமையை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இது குறித்து பேசிய அனுஷா, நான் 9-ம் வகுப்பு படிக்கும் போது இருந்து கிரிக்கெட் விளையாடி வருகிறேன். மாநில அணியில் விளையாடி உள்ளேன்.

தற்போது ரக்பி போட்டிக்கான தேசிய அணியில் இடம்பெற்றுள்ளேன். சர்வதேச அளவிலான போட்டியில் விளையாடுவது எனது கனவாகும் என கூறினார். குழந்தை திருமணத்திலிருந்து தப்பித்த சிறுமி விளையாட்டில் சாதனைப் படைத்துவருகிறார். – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!