எச்சி துப்பிக் கொடுப்பேன் நீங்கள் உண்ணுங்கள்… விக்ரமனை வம்பிழுத்த அசீம்

பிக் பாஸ் 6 டாஸ்கின்போது அசீமும், விக்ரமனும் மோதிக் கொண்ட ப்ரொமோ வீடியோ வெளியாகியிருக்கிறது.

படைத் தளபதி வேடத்தில் இருக்கும் அசீம் சக போட்டியாளரான விக்ரமனுடன் சண்டை போட்டிருக்கிறார்.

இல்ல நான் தான் வாயை வாடகைக்கு விட்டுட்டா வந்துருக்கேன் என்று அசீம் கொந்தளிக்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியிருக்கிறது. த்தூனு எச்சி துப்பிக் கொடுப்பேன் நீங்கள் உண்ணுங்கள் என்று அசீம் சொன்னதை கேட்ட விக்ரமனுக்கு கோபம் வந்தது. இருவரும் மோதிக் கொண்டார்கள்.

விக்ரமன்

அசீம் சொன்னதை கேட்ட விக்ரமனோ, வேண்டாம் அப்படிலாம் பேசாத என்றார். அதை கேட்ட அசீமோ யாருடா நீ என்று சீறுகிறார். முதல் ப்ரொமோ உப்பில்லாம இருக்கிறது என்று கூறியதற்காகவா இரண்டாவது ப்ரொமோவில் ராஜ குடும்பத்தினரை கத்த விட்டிருக்கிறீர்கள் பிக் பாஸ் என பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நல்ல வேளை

அசீம் கத்தியதை பார்த்தவர்களோ, கடந்த சில நாட்களாக சமத்தாக இருந்த அசீம் டைட்டிலை வென்றுவிடுவாரோ என்று பயமாக இருந்தது. கடவுள் இருக்கான் குமாரு என்று நிம்மதி அடைந்துள்ளனர்.

லிமிட்டு

அசீம் கத்த ஆரம்பித்ததுமே பார்வையாளர்கள் டென்ஷனாகிவிடுகிறார்கள். அதற்குத் தான் இப்படி ஒரு கமெண்ட். அசீமின் உண்மையான முகம் வெளியே வந்துவிட்டது என்கிறார்கள் பார்வையாளர்கள்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!