ராபர்ட் மாஸ்டரை பார்த்து நறுக்கென்று கேள்வி கேட்ட ஜனனி!

பிக் பாஸ் 6 வீட்டில் இருக்கும் ராபர்ட் மாஸ்டரை ஜனனி நறுக்கென்று கேள்வி கேட்க அவர் வழக்கம் போன்று சிரித்து மழுப்பிவிட்டார்.

ரச்சிதா மகாலட்சுமி பின்னாடியே சுற்றும் ராபர்ட் மாஸ்டரை பார்த்து ஜனனி ஒரு கேள்வி கேட்டிருக்கிறார்.

பிக் பாஸ் 6

பிக் பாஸ் 6 வீட்டில் இருப்பவர்களுக்கு லக்ஷுரி பட்ஜெட்டுக்காக ரோஸ்ட் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டில் உள்ளவர்கள் இரண்டு இரண்டு பேராக மேடைக்கு வந்து ரோஸ்ட் செய்ய வேண்டும். முதல் ஆளாக வந்து ராபர்ட் மாஸ்டரை பார்த்து ஒரு கேள்வி கேட்டார் ஜனனி.

ராபர்ட்

எல்லோரையும் டார்லிங், டார்லிங்னு சொன்னால் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறீர்களா இல்லை சுற்றுலாத்தலத்திற்கு வந்தீங்களானு ஜனனி கேட்க சிரித்து மழுப்பினார் ராபர்ட் மாஸ்டர். மணிகண்டனும், அமுதவாணனும் சும்மா சவுண்டு மட்டும் கொடுத்தார்கள்.

குவின்ஸி அருகில் நின்ற தனலட்சுமியை பார்த்தவர்கள் கலாய்க்கிறார்கள். குவின்ஸுக்கு தனாவை பிடிக்காவிட்டாலும் வேறு வழியில்லாமல் அருகில் நிற்பது பற்றி கமெண்ட் அடிக்கிறார்கள் பார்வையாளர்கள்.

ஓவராக பேசம், அழும் தனலட்சுமியை இந்த வாரம் வெளியே அனுப்புங்கள் பிக் பாஸ். அவரை பார்க்கவே பிடிக்கவில்லை என்று பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அது நடக்காது என்பது அவர்களுக்கே தெரிகிறது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!