அசீம் பற்றி ஆயிஷா, மைனா சொல்வது தான் உண்மையோ!?

பிக் பாஸ் 6 வீட்டில் இருக்கும் அசீம் பற்றி ஆயிஷாவும், மைனா நந்தினியும் பேசுவது தான் உண்மையோ என பேச்சு கிளம்பியிருக்கிறது.


பிக் பாஸ் 6

பிக் பாஸ் 6 வீட்டில் ஆரம்பத்தில் கத்திக் கொண்டே இருந்த அசீம் தற்போது அநியாயத்துக்கு மாறிவிட்டார். ஒவ்வொரு வாரமும் நாமினேட் செய்யப்பட்டாலும் காப்பாற்றப்படுகிறார். ரெட் கார்டு வாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மனிதர் தற்போது கமல் ஹாசனிடம் பாராட்டு பெறும் அளவுக்கு இருக்கிறார்.

ஆயிஷா

அசீமின் மாற்றத்தை பார்வையாளர்கள் மட்டும் அல்ல சக போட்டியாளர்களும் கவனிக்கத் தவறவில்லை. இந்நிலையில் தான் இப்படி டக்குனு மாறும் ஆள் இல்லை அசீம் என ஆயிஷாவும், மைனா நந்தினியும் பேசும் ப்ரொமோ வீடியோ வெளியாகியிருக்கிறது.

மைனா

சனிக்கிழமைக்கு பிறகு தான் அசீம் போக்கில் மாற்றம் ஏற்படுகிறது என்று ஆயிஷாவும், மைனா நந்தினியும் கூறுவது உண்மையே என்று பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். அசீம் மட்டும் அல்ல அனைத்து போட்டியாளர்களும் கமலை பார்த்த பிறகு வேறு விதமாக நடக்கிறார்கள் என்று விமர்சனம் எழுந்திருக்கிறது.

நிச்சயம்

முந்தைய வாரங்களை போன்றே இந்த வாரமும் அசீம் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் அவரை வெளியே அனுப்பும் ஐடியா பிக் பாஸுக்கு இல்லை. அதனால் இந்த வாரமும் அவர் காப்பாற்றப்படுவார் என்பதில் சந்தேகமே இல்லை என்கிறார்கள் பார்வையாளர்கள்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!