ராபர்ட் என்னை ஏமாத்திட்டான்… வனிதா சொன்ன அதிர்ச்சி தகவல்

ராபர்ட் மாஸ்டரை பிக் பாஸ் 6 வீட்டிற்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்த வனிதா விஜயகுமார் அது பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்.

பிக் பாஸ் 6

ராபர்ட் மாஸ்டருக்கு பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை வாங்கிக் கொடுத்ததே அவரின் முன்னாள் காதலியான வனிதா விஜயகுமார் தான். ஆனால் அதை அவர் பிக் பாஸ் வீட்டில் சொல்லவே இல்லை. இதை பார்த்து உண்மை தெரிந்தவர்கள் எல்லாம் ராபர்ட் மாஸ்டரை திட்டினார்கள். இந்நிலையில் இது குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் வனிதா.

வனிதா

வனிதா கூறியதாவது, சொந்தக் காசுல சூனியம் வச்சுக்கிட்டேன். எனக்கு மானம் போகுது. ராபர்ட்டை நம்பி பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்தது நான் தான். நானும், ராபர்ட்டும் பல ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்துவிட்டோம். நான் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது அவருக்கு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. அந்த பெண்ணுக்கு ஒரு குழந்தை இருந்தது என்றார்.

பேட்டி

வனிதாவுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் காதலித்ததே இல்லை, பப்ளிசிட்டிக்காக பேசினாங்க, தயாரிப்பாளர் என்கிற முறையில் நான் ஒத்துக்கிட்டேன் என்று ராபர்ட்டை அவர் மனைவி பேட்டியில் பேச வைத்திருக்கிறார். பின்னர் ஒரு படம் தொடர்பாக என்னிடம் பேசினார். நான் அவருடன் சேர்ந்து நடிக்க ரெடியா என்றார் என வனிதா மேலும் தெரிவித்தார்.

வாய்ப்பு

பிக் பாஸ் வீட்டிற்கு நீ போனால் நல்லா இருக்கும்னு நிறைய பேர் சொல்றாங்க, நீ என்னை நினைக்கிற என்று என்னிடம் கேட்டார் ராபர்ட். கண்டிப்பா போ என்றேன். நீ பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் பேச முடியுமா என்று கேட்டார். நான் விஜய் டிவியில பேசி, பிரதீப்பிடம் பேசினேன். நான் பிக் பாஸ் வீட்டிற்கு போய் அனைவரிடமும் உன்னை பத்தி பேசுவேனு ராபர்ட் சொன்னதை நம்பினேன் என்றார் வனிதா.

கமல்

வனிதாவால் தான் இந்த மேடையில நிற்கிறேன் என்று கமல் சார் முன்பே சொல்வேன் என்றான். வாய்ப்பு மட்டும் அல்ல சம்பளம் வரைக்கும் நான் ஹெல்ப் செய்தேன். பிக் பாஸ் வீட்டிற்குள் போவதற்கு முன்பு திடீர்னு என்னிடம் போட்டான் பாருங்க ஒரு பிட்டு. நான் ஏன் உன்னை பத்தி பேசணும்னு கேட்டான். ஏவி பார்த்து டென்ஷன் ஆயிட்டேன். அதில் ராபர்ட் பேசியது ஏமாற்றமாக இருந்தது என்று வனிதா கூறினார்.

காதல்

பிக் பாஸ் வீட்டில் யாராவது லவ் பண்ணுவாங்க. இதெல்லாம் வேணாம்னு நீ சொல்லு என்றேன். ராபர்ட் லவ் பண்ணுவானு எதிர்பார்க்கவே இல்ல. இந்த காதல் டிராக் எல்லாம் ஸ்க்ரிப்ட் கிடையாது. அவனுக்கு நான் வாய்ப்பு வாங்கிக் கொடுத்தால், என்னையே பகைச்சுக்கிட்டு, ஏமாத்திட்டு உள்ளே போய் பொய் சொல்லிக்கிட்டு இருக்கான் என்றார் வனிதா.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!