பிக்பாஸ் வீட்டுக்கு ஒயில்டு கார்டு என்ட்ரியாக வரப் போகும் பிரபலம்!

பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் ஒயில்டு கார்டு மூலம் வரப் போவது ஒரு பிரபலமான வி.ஜே. என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

பிக் பாஸ் 6

பிக் பாஸ் 6 வீட்டில் இருக்கும் யாரும் பெரிதாக பிரபலம் இல்லை என்று பார்வையாளர்கள் புலம்புகிறார்கள். இந்நிலையில் ஒயில்டு கார்டு மூலம் வி.ஜே. பார்வதி வரப் போகிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் தான் இந்த பார்வதி.

சர்வைவர்

சர்வைவர் நிகழ்ச்சியில் பார்வதி பேசியதை பார்த்தவர்கள், இவர் பிக் பாஸ் வீட்டிற்கு போக வேண்டியவர். தவறுதலாக சர்வைவருக்கு வந்துவிட்டார் என்றார்கள். அவர்கள் கூறியது பிக் பாஸ் காதுகளில் விழுந்துவிட்டது போன்று. பார்வதியை அழைத்து வருகிறாராம்.

பொம்பள அசீம்

ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அசீம் காட்டு கத்தலாக கத்துகிறார். இதில் பார்வதி வேறா?. பார்வதி ஒரு பொம்பள அசீமாச்சே. இரண்டு பேரும் சேர்ந்து கத்தினால் நம் காதுகள் செவிடாகிவிடுமே. பிக் பாஸுக்கு நம் காதுகள் மீது அப்படி என்ன பொறாமை என தெரியவில்லை என்கிறார்கள் பார்வையாளர்கள்.

வனிதா

வி.ஜே. பார்வதிக்கு பதில் வனிதா விஜயகுமார் அக்காவை அழைத்து வாங்க பிக் பாஸ். இந்த ராபர்ட் மாஸ்டர் ஆட்டம் தாங்க முடியல. வனிதா அக்கா வந்தால் தான் ராபர்ட் மாஸ்டர் அடங்குவார். வாய்ப்பு வாங்கிக் கொடுத்தவரையே மறந்துவிட்டார் ராபர்ட். அதற்காகவாவது வனிதாவை அழைத்து வாங்க என்று பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!