பிக் பாஸ் வீட்டில் டென்ஷன்… அமுதவாணனை அடித்த மணிகண்டன்..?

பிக் பாஸ் 6 வீட்டில் இருக்கும் அமுதவாணனை மணிகண்டன் அடித்ததாக புகார் எழுந்துள்ளது.

டாஸ்கின்போது மணிகண்டன் அமுதவாணனை அடித்ததாக புகார் எழுந்திருக்கிறது.

பிக் பாஸ் 6

கன்வேயர் வழியாக வரும் பொருளை எடுக்க பிக் பாஸ் 6 போட்டியாளர்களிடையே போட்டா போட்டியாக உள்ளது. அப்படி பொருளை எடுத்தபோது மணிகண்டன் தன்னை அடித்ததாக அமுதவாணன் புகார் தெரிவித்துள்ள ப்ரொமோ வீடியோ வெளியாகியிருக்கிறது.

மணிகண்டன்

எனக்கு வேற வேலை இல்லை பாரு என்று அமுதவாணனிடம் தெரிவித்தார் மணிகண்டன். நீங்க ஃபிரேம் பண்றீங்கனு மணிகண்டன் மேலும் கூறினார். உன்னை ஃபிரேம் பண்ணி எனக்கு ஒன்னுமே இல்ல மணி என்றார் அமுதவாணன்.

மொக்கை

இதெல்லாம் ஒரு சண்டை. இதற்கு ஒரு ப்ரொமோ வீடியோவா பிக் பாஸ். ப்ரொமோ வீடியோவே கொடூர மொக்கையாக இருக்கிறது. தயவு செய்து டாஸ்கை மாற்றவும். இந்த வாரம் சொதப்பல் என்கிறார்கள் பார்வையாளர்கள்.

போலி

இருப்பதிலேயே இந்த சீசன் தான் மிகவும் மோசமாக இருக்கிறது. ஒரு போட்டியாளர் கூட சரியில்லை. அனைவரும் போலி. கேமரா இருப்பதை மனதில் வைத்து நடந்து கொள்கிறார்கள். என்னமோ போங்க பிக் பாஸ் என பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!