ஹைபிட்ச்சில் கத்திய தனலட்சுமி – இரண்டாவது ப்ரொமோ வீடியோ!

பிக் பாஸ் 6 நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் பொறுமையை இழந்துவிட்டார்கள்.

பிக் பாஸ் 6 நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் காது பத்திரம் என்கிறார்கள்.

டாஸ்கின் போது கீழே விழுந்த தனலட்சுமி, மணிகண்டன் தான் தன்னை பிடித்து தள்ளியதாக கூறி முதல் ப்ரொமோ வீடியோவில் கத்தினார். இந்நிலையில் வெளியாகியிருக்கும் இரண்டாவது ப்ரொமோ வீடியோவிலும் அதே சண்டை தான் தொடர்ந்திருக்கிறது.

தனலட்சுமி

நீ தான் என்னை பிடிச்சு தள்ளின என்று மணிகண்டனிடம் தனலட்சுமி ஹைபிட்ச்சில் கத்துவதை பார்த்தவர்கள் காது பத்திரம் என்கிறார்கள். தனாவை கத்தவிட்டு அதையே ப்ரொமோவாக போட்டு இன்றைய நாளை ஓட்டிவிடலாம் என்று இறங்கிட்டார் பிக் பாஸ் என்கிறார்கள் பார்வையாளர்கள்.

முடியல

சும்மா சும்மா இந்த தனலட்சுமி கத்திக்கிட்டே இருப்பதை பார்க்க எரிச்சலாக இருக்கிறது. டாஸ்க் என்று வந்தால் கீழே விழுவது சகஜம். அதற்குப் போய் இந்த தனலட்சுமி இப்படி சீன் போடுகிறாரே என பிக் பாஸ் பார்வையாளர்கள் கடுப்பாகிறார்கள்.

அசீம்

கத்து கத்துனு கத்திக்கிட்டே இருந்த அசீம் அடங்கிவிட்டார். அவருக்கு பதில் தனலட்சுமி ஆரம்பித்துவிட்டார். பிக் பாஸ் வீடு என்று இருந்தால் யாராவது கத்திக் கொண்டே இருக்கணும் போன்று என விமர்சனம் எழுந்துள்ளது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!