புத்த மதத்திற்கு குடும்பத்துடன் மாறிய பிரபல வில்லன் நடிகர்!

நடிகர் சாய் தீனா தன் குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறியிருக்கிறார். இது தான் தற்போது சமூக வலைதளத்தில் ஹாட் டாபிக்.

வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டுபவர் சாய் தீனா. கமல் ஹாசனின் விருமாண்டி, தனுஷின் புதுப்பேட்டை, ரஜினியின் எந்திரன், கார்த்தியின் கொம்பன், விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

விருமாண்டி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான சாய் தீனா தன் குடும்பத்துடன் புத்த மதத்தை ஏற்றிருக்கிறார். புத்த பிக்கு மௌரியா முன்பு அவர் மதம் மாறியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியிருக்கிறது.

எந்த மதத்தை பின்பற்ற வேண்டும் என்பது சாய் தீனாவின் விருப்பம். அதனால் இது பற்றி யாரும் விமர்சிக்க வேண்டாம் என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.

முன்னதாக கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தபோது 250 குடும்பங்களுக்கு உணவு அளித்து வந்தார் சாய் தீனா.

அதற்கும் முன்பு காதல் படம் மூலம் பிரபலமான விருச்சககாந்த் சென்னையில் இருக்கும் கோவில்களில் பிச்சை எடுப்பது குறித்து அறிய வந்து உதவி செய்தார். அதன் மூலம் சாய் தீனா ரசிகர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!