நடிகை சுனிதாவை திருமணம் செய்தால்… சார்ப்பட்ட பரம்பரை நடிகரின் ஆசை.!

குக் வித் கோமாளி மூலம் பிரபலமான சுனிதாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார் சார்பட்டா பரம்பரை நடிகர்.

சுனிதா

அசாமை சேர்ந்தவர் சுனிதா கோகோய். விஜய் டிவியில் ஒளிபரப்பான பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார் சுனிதா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரொம்பவே பிரபலமானார்.

குக் வித் கோமாளி

சுனிதா தத்தி தத்தி பேசும் தமிழுக்கு என்று பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற போது நடிகர் சார்பட்டா பரம்பரை நடிகர் சந்தோஷ் பிரதாப்புடன் பழக்கம் ஏற்பட்டது. சுனிதா சந்தோஷ் பிரதாப்புடன் ரொமான்ஸ் செய்த சக போட்டியாளர்கள் கிண்டலடித்து வந்தனர்.

திருமணம் செய்தால்

இருவரும் இணைந்திருக்கும் வீடியோக்கள் பெரும் வைரலானது. இதனால் இருவரும் காதலிக்கிறார்கள் என்று கிசுகிசு எழுந்தது.

இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சந்தோஷ் பிரதாப், சுனிதா குறித்து பேசியுள்ளார். அதில் சுனிதாவை தனக்கு நல்ல தோழி என்றும் அவரை திருமணம் செய்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

படங்கள்

சந்தோஷ் பிரதாப் சார்ப்பட்டா பரம்பரை படத்தில் ராமன் கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதன் மூலம் பெரும் பிரபலமான சந்தோஷ் பிரதாப் டியர் டெத், பிசாசு 2, மீண்டும் வா அருகில் வா, தி ரோடு ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!