ரயில் சேவை தாமதம்… காரணம் கழுகா?… நடந்தது என்ன?


குளவி கூடு கலைந்தமையினால் மலையக ரயில் சேவை போக்குவரத்து 35 நிமிடங்கள் தாமதமாகியது. வட்டவலை ரயில் நிலையப்பகுதியில் மரமொன்றிலிருந்த குளவி கூட்டை கழுகு களைத்தமையினால் இன்று காலை 9.30 மணியளவில் வட்டவலை ரயில் நிலைய அதிகாரிகள் இருவர் குளவி கொட்டுக்கு இழக்கியுள்ளனர்.

இதனையடுத்து கொழும்பிலிருந்து வந்த பொடி மெனிக்கே ரயில் கடவலையிலும் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த உடரட்ட மெனிக்கே ரயில் ரொசல்லையிலும் நிறுத்தப்பட்டது.

ரயில் பயணிகளின் பாதுகாப்பு கருதி நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அதிகாரிகளினால் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் குளவிகள் அப்பகுதிகளிலிருந்து வெளியேரிய பின் 11 30 மணியளவில் மீண்டும் ரயில் சேவை ஆரம்பமாகியது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!