சண்டை போட போன ராம்… நடுவுல புகுந்து கெடுத்த ஆயிஷா!

பிக் பாஸ் 6 வீட்டில் டாஸ்க் செய்யும்போது ஏற்பட்ட பிரச்சனையில் ஆயிஷா மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

பிக் பாஸ் 6 வீட்டில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வரும் போட்டியாளரான ராம் ஏதோ பேச வர அவரை தடுத்து நிறுத்திவிட்டார் ஆயிஷா.

பிக் பாஸ் 6

பிக் பாஸ் 6 வீட்டில் டாஸ்கின்போது ஆயிஷா, அசீம் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அப்பொழுது ராம் ஏதோ பேச வர ஆயிஷா தடுத்து நிறுத்திவிட்டார். மேலும் அசீம் குழுவிடம் ஆயிஷா மன்னிப்பு கேட்ட ப்ரொமோ வீடியோ வெளியாகியிருக்கிறது.

பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததில் இருந்து ராம் பெரிதாக பேசியதே இல்லை. இந்நிலையில் அவரே ஒரு வாக்குவாதத்தில் பங்கேற்க முயற்சி செய்தார். அதையும் ஆயிஷா தடுத்து நிறுத்தி கம்முனு கிட என்று கூறிவிட்டார்.

நாமினேட்

இந்த வார எவிக்ஷனுக்காக ஆயிஷாவின் பெயரை ஒன்றுக்கும் மேற்பட்ட ஹவுஸ்மேட்ஸ் நாமினேட் செய்திருக்கிறார்கள். ஷெரினாவை அடுத்து ஆயிஷாவை வெளியேற்றுமாறு பார்வையாளர்களும் கூறி வருகிறார்கள்.

ஃபீலிங்ஸ்

ராம் அதிசயமாக இப்பொழுது தான் பேசியிருக்கிறார். அதையும் தடுத்திட்டீங்களேப்பா என பார்வையாளர்கள் ஃபீல் பண்ணுகிறார்கள். சிலர் கிண்டல் செய்கிறார்கள். இதற்கிடையே விக்ரமனை பங்கம் செய்து இப்படி ஒரு மீம்ஸ் போட்டிருக்கிறார்கள்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!